• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மதுரையில் மலையளவு குவிந்திருக்கும் குப்பைகள் – ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றும் மாநகராட்சி பணியாளர்கள்…

ByKalamegam Viswanathan

Nov 13, 2023

தீபாவளி பண்டிகை இன்று காலை முதல் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக நேற்று நள்ளிரவு வரையில் மதுரை விளக்குத்தூண் மற்றும் மாசி வீதிகளில் சுமார் 2000க்கும் அதிகமான சாலையோரக்கடைகள் மூலமாக விற்பனை செய்யப்பட்டது.

குறிப்பாக புத்தாடைகள், பாய், தலையணைகள், கைலிகள், குறைந்த விலை துணி ரகங்கள்,  காலணிகள், பேன்சி ரகங்களான கவரிங் வளையல் , கம்மல், நெக்லஸ், செயின் ,பேக்குகள், போர்வை, மிதியடிகள் உள்ளிட்ட வீட்டுக்கு தேவையான பொருள்கள் விற்பனை படு ஜோராக நடைபெற்றது.அதனை பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து வாங்கி சென்றனர்.

குறிப்பாக, அவைகளில் பாலிதீன் கவர்கள் அதிக அளவில் பயப்படுத்தப்பட்டது. தொடர்ந்து இன்று விளக்குத்தூண் மாசி வீதிகளில் சாலையோரங்களிலும், குப்பைத் தொட்டிகளிலும் மலை மலையாக டன் கணக்கில் குப்பைகள் மற்றும் பாலத்தின் கவர்கள் குவிந்து காணப்படுகின்றன. அதனை மாநகராட்சி ஊழியர்கள் ஜேசிபி இயந்திரம் கொண்டும், மனித உழைப்பின் மூலம் குப்பைகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.