• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சாத்தூர் அரசு மருத்துவமனை வழியில் குப்பை… நோயாளிகள் அவதி!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அதிகமாக குப்பை கொட்டப்படுவதால் நோயாளிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
சாத்தூர் வெங்கடாசலபுரம் கவுசிங் போர்டு காலணியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
கே.கே.நகரில் இருந்து அரசு மருத்துவமனைக்கு செல்லும் ரோட்டில் கேகே நகர் மற்றும் ஹவுசிங் போர்டு காலனியில் சேகரிக்கப்படும் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இங்கு பிளாஸ்டிக் கழிவுகளும் கட்டிடக்கழிவுகளும் அதிக அளவில் கொட்டப்படுகிறது. மேலும் குப்பைகள் கொட்டப்பட்டு அதில் தீ வைத்து எரிப்பதால் மருத்துவமனையில் உள்ள புற நோயாளிகளை சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் உரையால் பாதிக்கப் படுகின்றனர்.
பிளாஸ்டிக் கழிவுகளை எடுப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு சுவாச நோய் பாதிப்பும் ஏற்படும் அபாயம் உள்ளது. அரசு மருத்துவமனைக்கு அருகில் உள்ள ரோட்டில் இதுபோன்று கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது மக்கள் நோயாளிகள் நலன் காக்கப்பட்டு ஊராட்சி நிர்வாகம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் ரோட்டில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் பெரிதும் வருத்தத்துடன் புகார் அளித்துள்ளனர்.