கோவை ஒண்டிப்புதூரில் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை 3 பேர் கொண்ட கொள்ளை கும்பல் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒண்டிப்புதூர் கம்பன் நகர் பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் வழக்கம் போல வீட்டின் முன்பு தனது வாகனத்தை நிறுத்தி வைத்து இருந்தார். இரவு சுமார் 12.30 மணியளவில் அவரது வீதி வழியே வந்து நோட்டமிட்ட 3 பேர் கொண்ட கும்பல் அவரது வாகனத்தின் Handle Bar ஐ உடைத்து வாகனத்தை திருடி சென்றுள்ளனர். இது தொடர்பாக வாகனத்தை இழந்த ஆகாஷ் சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிசிடிசி காட்சிகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாகனத்தின் மீது ஏறி நின்று ஹேண்ட்பாரை உடைக்கும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.











; ?>)
; ?>)
; ?>)