• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

காந்திக்கு பிடித்த பாடல் நீக்கம்! – எம்.பி., வெங்கடேசன் கண்டனம்!

மகாத்மா காந்திக்கு பிடித்தமான அபைட் வித் மீ பாடல் குடியரசு தின நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதற்கு மதுரை எம்.பி., சு.வெங்கச்டேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா முடிந்ததும் ஜனவரி 29 ஆம் தேதி படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி நடத்தப்படும். இந்நிகழ்ச்சியில் 44 பீகில் வாசிப்பாளர்கள், 16 ட்ரம்பட் இசைக் கலைஞர்கள், 75 ட்ரம்மர்கள் மற்றும் 6 பேண்டு வாத்தியக் கலைஞர்கள் இணைந்து பாடல்களை இசைப்பர். அந்த வகையில் இந்த ஆண்டு 25 பாடல்களை இசைக்கவுள்ளனர்.

அந்தவகையில் மகாத்மா காந்திக்கு விருப்பமான ‘Abide with me'(அபைட் வித் மீ ) என்ற பாடல் 1950ம் ஆண்டிலிருந்து இசைக்கப்படு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பாடல்களின் பட்டியலில் இருந்து ‘அபைட் வித் மீ’ ஆங்கிலப் பாடல் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த பாடல் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கிறிஸ்தவர் ஹென்ரி பிரான்சிஸ் லைட் என்பவர் 1847ல் இயற்றியது. இந்த பாடல் நீக்கப்பட்டத்தற்கு பலரும் தங்களது எதிர்ப்பை தற்போது பதிவு செய்து வருகின்றனர்.

அவர்கள் வரிசையில் மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் , ” கிருஸ்தவரால் எழுதப்பட்ட பாடல்.. திருவாசகத்தைப் போன்று மனதை உருக்கும் பாடல்… எல்லா மதத்தினருக்கும் ஏற்புடைய பாடல்… அண்ணல் காந்தியாருக்கு மிகப்பிடித்தப் பாடல்… சூழும் இருளின் அச்சம் போக்கும் ஒளியே இறைவன்… ஒளியை நீக்கி அச்சம் பரப்பும் இருளே சாத்தான்… ” என்று பதிவிட்டுள்ளார்.