• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சுவாமிமலையில் பௌர்ணமி கிரிவலம்..,

சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக்குழு டிரஸ்ட் சார்பில் புரட்டாசி மாத பௌர்ணமி கிரிவலம், வேல் வழிபாடு, திருவீதி உலா வல்லப கணபதி சன்னதியில் இருந்து துவங்கியது. ஆடுதுறை பாலன் சிட் பண்ட்ஸ் (பி) லிட் மோகனசுந்தரம் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக நாககுடி அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோயில் ஸ்தாபகர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். இந்த கிரிவலத்தில் சிவத்திரு திருவருட்செம்மல் இறைநெறி இமயவன் வழிகாட்டுதலுடன் கூட்டு வழிபாடு மற்றும் கிரிவலம் நடைபெற்றது. சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக்குழு நிறுவனர் கேசவராஜன், நிர்வாக அறங்காவலர் சிவசங்கரன், செயலாளர் சேகர், பொருளாளர் சுவாமிநாதன், அறங்காவலர்கள் மாணிக்கம், சண்முகம், நெடுஞ்செழியன், ஆலோசகர் கலைச்செல்வன் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

கிரிவலத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கும்பகோணம் – மயிலாடுதுறை ஆட்டோ மொபைல்ஸ் கணேஷ் குடும்பத்தினர் சார்பில் அமுது வழங்கப்பட்டது.