• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தனியார் பேருந்துகளில் சிறுவர், சிறுமியர்களுக்கு முழு கட்டணம்.., கட்டாயப்படுத்தி பயணசீட்டு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு…

ByP.Thangapandi

Sep 27, 2024

உசிலம்பட்டி பகுதிகளில் இயங்கும் தனியார் பேருந்துகளில் சிறுவர் சிறுமியர்களுக்கு அரை டிக்கெட் எனும் பாதி கட்டணம் இல்லை எனவும், முழு கட்டணம் செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தி பயணசீட்டு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம், வத்தலக்குண்டு, அய்யம்பாளையம், கிருஷ்ணாபுரம், விருதுநகர் பகுதிகளுக்கும், மதுரை, தேனி செல்வதற்கும் என தினசரி 50க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இந்த தனியார் பேருந்துகளில் பெரும்பாலான பேருந்துகளில் சிறுவர் சிறுமியர்களுக்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அரை டிக்கெட் எனும் பாதி கட்டணத்திற்கான பயணச்சீட்டுகள் வழங்கப்படுவதில்லை எனவும், முழு கட்டணம் கட்டாயப்படுத்தி வசூல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

இன்று உசிலம்பட்டியிலிருந்து தனியார் பேருந்தில் திருமங்கலத்திற்கு தனது குழந்தைகளுடன் பயணம் செய்த நபர் சிறுவர் சிறுமிக்கு அரை டிக்கெட் கேட்ட போது எங்கள் பேருந்தில் முற்றுலுமாக அரை டிக்கெட் கிடையாது முழு கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டும் என அப்பேருந்தின் நடத்துநர் வசூல் செய்து பயண சீட்டு வழங்கிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

தினசரி குழந்தைகளுடன் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்கள் சிறுவர், சிறுமியர்களுக்கும் முழு கட்டணம் செலுத்தும் வேதனை நிகழ்வதாக கூறப்படுகிறது. இது குறித்து வட்டார வாகன போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து தனியார் பேருந்துகளின் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.