• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம்..ஆளுநர் பங்கேற்பு..

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 251வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் புகழையும், நினைவையும் போற்றும் வகையில் நீதிமன்றம் எதிர் புறத்தில் உள்ள அண்ணாரின் திருவுருவச்சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி,தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன்,மத்திய இணை அமைச்சர், மாவட்ட வருவாய் அலுவலர்(DRO) ஜெயஸ்ரீ அழகுராஜா, திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர், நயினார் நாகேந்திரன், திருநெல்வேலி, வருவாய் கோட்டாட்சியர் மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் உட்பட அனைவரும் மலர்தூவி மரியாதை செய்து கலந்து கொண்டனர். கவர்னர் ஆர்.என்.ரவியை, மாவட்ட ஆட்சியர் வி .விஷ்ணு வரவேற்றார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர்(DRO) ஜெயஸ்ரீ அழகுராஜா, தமிழக ஆளுநருக்கும், தெலுங்கானா ஆளுநருக்கும் புத்தகம் ஒன்றை பரிசளித்தார் .