விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள தூங்கா ரெட்டிபட்டி கிராமத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் 21 ஜோடிகளுக்கு இலவச சமூக மத நல்லிணக்கத்துடன் கூடிய திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டது.

திருமண வயதை எட்டியும் திருமணம் செய்து வைக்க முடியாத வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ரூபாய் 60 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசையுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
இந்த திருமணத்தில் இந்துக்கள் மட்டுமல்லாமல் கிறிஸ்தவ இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் ஜாதி மத பேதமின்றி ஒரே முறையில் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டது.

ஒரே மேடையில் 21 ஜோடிகளும் ஒரே நேரத்தில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்களுக்கு அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது. 21 ஜோடிகளில் குடும்பங்களும் இணைந்து திருமணத்தை கலந்து கொண்ட மணமக்களை மனதார வாழ்த்தினர்.