• Thu. Feb 19th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

நவீன தொழில்நுட்பத்தை கற்றுக் கொடுக்க இலவச திறன் மேம்படுத்தும் பயிற்சி..,

BySeenu

Feb 19, 2026
கோவை மேட்டுப்பாளையம் சாலை ஜி.என் மில்ஸ் உள்ள பெர்ஜர் பெயிண்ட்ஸ் நிறுவனத்தில் பெயிண்டர்களுக்கு நவீன தொழில்நுட்பங்கள் கற்றுக் கொடுக்க இலவச திறன் மேம்பாட்டு திட்டத்தை ஸ்மைல் பவுண்டேஷன் மற்றும் பெர்ஜர் பெயிண்ட்ஸ் ஆகியவற்றை இணைந்து "i-Train on Wheels" திட்டத்தை தொடங்கி வைத்தனர்.இந்த திட்டம் ஏற்கனவே கர்நாடக மாநிலம் மைசூரில் முதன் முறையாக செயல்பட்டு வரும் நிலையில் தற்போது தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் இரண்டாவது முறையாக அறிமுகம் செய்து வைத்துள்ளனர்

i-Train on Wheels மூலமாக பெயிண்டர்களுக்கு வீடுகளில் பெயிண்ட் அடிப்பதற்கு நவீன முறையில் வர்ணம் பூசம் தொழில்நுட்பங்களை கற்றுக் கொடுத்து அவர்களின் திறமை மேம்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கம் எனவும் இதன் மூலம் அதிக வேலை வாய்ப்புகளும் கிடைக்கும் என தெரிவித்தனர்.

மேலும் இந்தத் திட்டத்தை பற்றி கற்றுக்கொள்ள இதற்காக பிரத்தியேகமா தயாரிக்கப்பட்ட வாகனத்தை நேரடியாக பெயிண்டர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து செய்முறையாக செய்து பயிற்சி வழங்கப்படும்.

இந்த திட்டம் இந்தியாவில் உள்ள 26 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் என 503 மாவட்டங்களில் செயல்படுத்தி வருவதாகவும் பெயிண்டர்களுக்கு இந்த திறன் பயிற்சியானது முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு.இது வரை நாடு முழுவதும் 3 லட்சத்து 15 ஆயிரம் பெயிண்டர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.