புதுக்கோட்டையில் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் 51 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு புதுக்கோட்டை நகரமன்ற வளாகத்தில் இன்று மாபெரும் இலவசம் மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமில் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பர்வேஸ் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரவணன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்குமார் கலந்து கொண்டு மருத்துவ முகாமில் புதுக்கோட்டை நகரப் பகுதியில் உள்ள பொதுமக்களும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். முகாமில் கண் சிகிச்சை இதயம் நுரையீரல் மற்றும் எக்கோ ஸ்கேன் மற்றும் எண்ணற்ற சிகிச்சைகளை முகாமில் நடைபெற்றன.

முகாமில் ஏதேனும் அதிக அளவில் குறைபாடுகள் உள்ள நோயாளிக்கு தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக மேல் மருத்துவ சிகிச்சை செய்து தரப்படும் என்று அறிவித்தனர். முகாமில் கண் சிகிச்சை கிருஷ்ணா கண் மருத்துவமனை அரசு மருத்துவமனை மருத்துவர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.