புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கள்ளுக்கு வியல் பட்டி கிராமத்தில் திருநங்கைகளுக்காக அரசு திட்டத்தின் சார்பாக கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் மற்றும் வீட்டுமனைகள் காண பட்ட வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு மாநில துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்வு பங்கேற்று பயனாளிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் தமிழ்நாடு மாநில கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்ய நாதன் மாவட்ட ஆட்சியர் அருணா புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜராஜன் உள்ளிட்ட அரசு துறையின் அனைத்து மாவட்ட அதிகாரிகள் பொதுமக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் நிகழ்வில் பங்கேற்றனர். வீட்டுமனை மற்றும் பட்டா கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை பெற்றுக் கொண்ட திருநங்கைகள் தமிழக துணை முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.