கலப்பை மக்கள் இயக்கத்துடன், ப்ரண்ட்ஸ் இந்தியா பவுன்டேசன்
நலம் கல்வி அறக்கட்டளைகள் இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
குமரி மாவட்டம் கலப்பை மக்கள் இயக்கம் ஒவ்வொரு மாதமும் 10_க்கும் குறையாத பல்வேறு நலப்பணிகளை செய்து வருகிறனர்.
கலப்பை மக்கள் இயக்கத்தோடு இணைந்து. கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள கொட்டாரம் பகுதியில் தனியார் கல்யாணம் மண்டபத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமில் எம்எல் மருத்துவமனை சிபிஹெச் கண் மருத்துவமனை, நலம் ஹெல்த் கேர், ஜேம்ஸ் பல் மருத்துவமனை, எம்.எல். எலும்பு முறிவு மருத்துவமனைகளை சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்றார்கள்.

பேராசிரியர் முனைவர் எஸ். ராமகிருஷ்ண மூர்த்தி, டாக்டர் கே. பாபு ராஜன், டாக்டர்.பி. தனலெட்சுமி, டாக்டர் ஆர்.நலம்குமார், ஆகியோர் மருத்துவ முனைக்கு வந்த பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகளை மேற்கொண்டதுடன் நோயின் தன்மைக்கு ஏற்ற மருந்துகளை இலவசமாக வழங்கினார்கள்.

மருத்துவ முகாமின் தொடக்கத்தில். குத்துவிளக்கில் தீபம் ஏற்றினார். பொன்செல்வி மற்றும் மகளீர் மருத்துவர்களும் நிகழ்வில் கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவர் பி.டி.செல்வகுமார், கலப்பை மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பாலகிருஷ்ணன், மகளீர் அணி தலைவர் பேரசீரியை முனைவர் ரெங்கநாயகி ஆகியோர் பங்கேற்றனர்.
