• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

இனி மாநகர பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம்..!

Byகாயத்ரி

Mar 8, 2022

தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள திமுக அரசு மகளிருக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கட்டணமில்லா இலவச பேருந்து வசதியும் ஒன்று. இதனால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய பெண்கள், கூலி வேலை செய்யும் பெண்கள், சாலையோரம் சிறுதொழில் செய்யக்கூடிய பெண்கள் அதிகளவு பயணம் செய்து வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து மகளிருக்கு சாதாரண பேருந்துகளில் இலவச பயணம் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது மாநகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதையடுத்து பெண்கள் மத்தியில் இத்திட்டம் அமோக வரவேற்பு பெற்றுள்ளது.

மேலும் இத்திட்டம் தொடங்கியபோது சென்னை மாநகர பஸ்களில் 4,5 லட்சம் என்ற கணக்கில் பெண்கள் பயணம் செய்து வந்துள்ளனர். ஆனால் தற்போது தினமும் சராசரியாக 8 லட்சம் பெண்கள் பயணம் செய்து வருகிறார்கள்.மேலும் இத்திட்டத்திற்கு பெண்கள் அனைவரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தங்களின் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.