தென்கரை ஊராட்சியில் சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சி அலுவலக வளாகத்தில் தென்கரை ஊராட்சி மன்றம் மற்றும் சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை கோ லோக பிருந்தாவனம் அறக்கட்டளை மதுரை அண்ணாநகர் தி ஐ பவுண்டேசன் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் மருத்துவ முகாம் நடத்தினர். முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா ஐயப்பன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை பொதுச்செயலாளர் நாகு ஆசாரி நிர்வாகிகள் ஆறுமுகம், செந்தில் வினோத், பாண்டி, அழகர்சாமி, நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற செயலாளர் முனியராஜ் வரவேற்றார். துணைத் தலைவர் கிருஷ்ணன் மரக்கன்று வழங்கினார்.

இதில் டாக்டர் சுவேதா தலைமையில் தங்க முனியாண்டி, மோகனா தினகரன், ஜெயபிரகாஷ் உள்பட மருத்துவ குழுவினர் கிராம பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்து கண் ஆபரேஷனுக்கு தகுதியானவர்களை தங்களது ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
