தமிழகத்தில் மகளிருக்கான இலவச பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டியில் சாத்தூர் டெப்போ மூலமாக சாத்தூரிலிருந்து தாயில்பட்டி வழியாக கோட்டைப்பட்டி, சாத்தூரிலிருந்து தாயில்பட்டி வழியாக செவல்பட்டி, சாத்தூரிலிருந்து தாயில்பட்டி வழியாக ஆலங்குளத்திற்கும், சிவகாசி டெப்போவில் இருந்து சிவகாசியிலிருந்து வெற்றிலையூரணி வழியாக தாயில்பட்டி , விஜய கரிசல்குளம் வரையிலும், சிவகாசியில் இருந்து தாயில்பட்டி, வெம்பக்கோட்டை கோட்டைபட்டி வரையிலும், மகளிருக்கான இலவச பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் சிவகாசியில் இருந்து தாயில்பட்டி வழியாக சாத்தூர் செல்லும் அரசு பஸ் இதுவரை மகளிருக்கு கட்டணம் உள்ள பஸ்ஸாக இயக்கப்பட்டு வந்தது .

நேற்று முதல் புதிய பஸ் ஆக மாற்றப்பட்டு மகளிருக்கான இலவச பஸ்ஸாக மாற்றப்பட்டுள்ளதால் இதில் பயணம் செய்யக்கூடிய பெண்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
