அம்மாவின் இணையில்லா புரட்சித் திட்டம்!
புரட்சித் தலைவி அம்மாவின் சிந்தையில் உதித்த ஒவ்வொரு திட்டமும், ஏழை எளிய சமுதாயத்தை முன்னேற்றும் விதமாகவும், உலக அளவில் போற்றப்பட்டு பின்பற்றப்படும் விதமாக இருக்கும்.
மேலும் வெளிப்படையாக பார்த்தால் அம்மாவின் திட்டம் ஒரு காரணத்தோடு இருப்பதுபோல தோன்றும், ஆனால் ஆராய்ந்து பார்த்தால் அதற்குள் பல தொலை நோக்கு அம்சங்கள் இருப்பது தெரியவரும்.
அப்படிப்பட்ட அம்மாவின் திட்டங்களில் ஒன்றுதான் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம். இலவசம் என்ற சொல் கூட, வாங்குபவர்களை காயப்படுத்திவிடக் கூடாது என்பதற்காக விலையில்லா சைக்கிள் திட்டம் என்று மாற்றி யோசித்து பெயர் வைத்தார் புரட்சித் தலைவி அம்மா.
விலையில்லா சைக்கிள் திட்டமும் அதன் வீச்சும் இன்றும் பலரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவிகள் தங்கள் கிராமத்தில் இருக்கும் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் படித்து முடித்த பிறகு, மேல் நிலைப் பள்ளிக்கு அருகே இருக்கும் சிற்றூர்களுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. மூன்று முதல் நான்கைந்து கிலோ மீட்டர்கள் பயணித்து மேல்நிலைப் பள்ளிக்கு தங்கள் பெண்களை அனுப்ப கிராமப்புறங்களில் இருக்கும் பெற்றோர்கள் தயக்கம் காட்டினர். கொஞ்சம் வசதியான வாய்ப்பிருக்கும் பெற்றோர் தங்கள் வீட்டுப் பெண்களை அருகே இருக்கும் ஊரில் அமைந்துள்ள மேல் நிலைப் பள்ளிகளுக்கு அழைத்துச் சென்றுவிட்டு, மீண்டும் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்தனர்.
ஆனால் பெரும்பாலான கிராமத்துப் பெற்றோர்கள் கூலி வேலைக்கு செல்பவர்கள். காலையில் சீக்கிரமே எழுந்து அவர்கள் கூலி வேலைக்கு சென்றால்தான்… குடும்பத்தை காப்பாற்ற முடியும். அப்படிப்பட்ட குப்பன்களாலும் சுப்பன்களாலும் தங்கள் வீட்டுப் பெண்களை நான்கு கிலோ மீட்டர், ஐந்து கிலோ மீட்டர் தாண்டியுள்ள மேல் நிலைப் பள்ளிக்கு கொண்டு விட்டுவிட்டு பின் பள்ளி முடிந்ததும் அழைத்து வர முடியாது. பெற்றோர்களே காலை சீக்கிரம் சென்று மாலை தான் வீடு திரும்புவார்கள்.
இதனால் என்ன செய்தார்கள் என்றால்…பொட்டப் புள்ளதானே, பத்தாவது வரைக்கும் படிச்சா போதும் என்று வீட்டுக்குள் இருக்கச் சொல்லிவிட்டார்கள்.
இந்த நிலையைதான் அம்மாவின் விலையில்லா சைக்கிள் திட்டம் அடியோடு புரட்டிப் போட்டது.
ஆமாம்… 2001-06 ஆம் ஆண்டு அதிமுகவின் ஆட்சிக் காலத்தில்தான், 11 ஆம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் அவர்கள் பள்ளிகளுக்கு வந்து செல்வதற்காக விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படும் என்ற திட்டத்தை புரட்சித் தலைவி அம்மா அறிவித்து செயல்படுத்தினார். உண்மையிலேயே இது புரட்சித் திட்டம்.
கிராமங்களில் இருந்து அருகே இருக்கும் சிற்றூர்களுக்கு 11 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு படிப்பதற்காக மாணவிகள் வண்ண வண்ண சைக்கிள்களில் பறந்தது பட்டாம்பூச்சி கூட்டம் போல அழகாக இருக்கும்.
கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை உறுதிப்படுத்தி… மாநிலத்தில் பெண் கல்வியை உயர்த்தி… இதுமட்டுமல்ல… கிராமப்புறங்களில் அமைந்துள்ள பள்ளிகளில் இடைநிற்றல் விகிதத்தையும் குறைத்தது புரட்சித் தலைவி அம்மாவின் இந்த விலையில்லா சைக்கிள் திட்டம்.
2001-02 ஆம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டபோது, பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பழங்குடியினர் (ST) வகுப்பைச் சேர்ந்த 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு விலையில்லா சைக்கிள் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் நோக்கம் மாநிலத்தில் உள்ள SC மற்றும் ST மாணவர்களிடையே பெண் கல்வியை ஊக்குவிப்பதுதான். பின்னர், இந்தத் திட்டம் 2005 ஆம் ஆண்டில் விரிவுபடுத்தப்பட்டு, அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. அதுமட்டுமல்ல, அரசுப் பள்ளிகளோடு அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
2011-2016 அம்மா ஆட்சிக் காலத்தில் மாநிலம் முழுவதும் உள்ள பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு கல்வியாண்டிற்கும் கிட்டத்தட்ட 6.50 லட்சம் விலையில்லா மிதிவண்டிகள் விநியோகிக்கப்பட்டன.
பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல்… ஐடிஐ எனப்படும் தொழில் படிப்புகள் படிக்கும் மாணவர்களுக்கும் இந்த விலையில்லா சைக்கிள் திட்டம் விரிவாக்கப்பட்டது.
பள்ளி செல்வதற்காக சைக்கிள்கள் கொடுத்தால், பெண் பிள்ளைகள் அதை பள்ளி செல்வதற்காக மட்டுமா பயன்படுத்தினார்கள்? விடுமுறை காலங்களில் டியூசன் செல்வதற்காகவும், வீட்டில் அப்பா அம்மாவுக்கு உபயோகப்படும் வகையில் அக்கம்பக்க கடைகளுக்கு சென்று வருவதற்கும் அதை பயன்படுத்தினார்கள்.
ஒரு பெண்ணுக்கு செய்யும் உதவி, ஒரு குடும்பத்துக்கு செய்யும் உதவி என்பதை நன்கு அறிந்தே புரட்சித் தலைவி அம்மா இந்த திட்டத்தை சமூக நீதி காக்கும் திட்டமாக செயல்படுத்தினார்.
அம்மாவின் விலையில்லா சைக்கிள் திட்டம் கிராமப்புற மாணவர்களுக்கு சிறகு முளைத்தது போல பறக்க உதவியது. இதன் மூலம் அவர்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்த முன்னேற்றங்களைப் பெற்றார்கள்.
இதுமட்டுமல்ல…இப்போதூ உலகங்கும் சுற்றுச் சூழல் மாசுபாட்டை குறைக்கும் விதமாக மோட்டார் சைக்கிள்களுக்கு பதில் சைக்கிளை பயன்படுத்துங்கள் என்று வளர்ந்த நாடுகள் பலவும் சைக்கிள் போக்குவரத்தை ஊக்குவிக்கின்றன.
சைக்கிளில் சென்றால் தனியாக உடற்பயிற்சி செய்ய வேண்டியதில்லை. சைக்கிள் மிதிப்பதே ஆரோக்கியமான உடற்பயிற்சியாகும். மேலும் சைக்கிள் எந்த வித புகையையும் வெளியேற்றுவதில்லை. இதனால் காற்றுக்கும் சுற்றுச் சூழலுக்கும் எவ்வித மாசும் ஏற்படுவதில்லை.
இப்படி மாணவ மாணவர்களின் கல்வி, தனி நபர் ஆரோக்கியம், குடும்ப ஆரோக்கியம், மாசில்லாத சுற்றுச் சூழல் என புரட்சித் தலைவி அம்மாவின் விலையில்லா சைக்கிள் திட்டம் என்பது இணையில்லா புரட்சி சமூக நீதித் திட்டமாக இன்றளவும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
தீர்க்க தரிசனம் மிக்க அந்த புரட்சித் தலைவியின் திட்டத்தை அடுத்து வரப் போகும் புரட்சித் தமிழர் அண்ணன் எடப்பாடியாரின் ஆட்சியில் மேலும் சிறப்பான முறையில் செயல்படுத்துவோம்,,,,
வரும் வாரம் சந்திப்போம்
