• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

100 சிறப்பு குழந்தைகளுக்கு இலவச செயற்கை கால்

BySeenu

Dec 22, 2024

ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் சார்பில் 100 சிறப்பு குழந்தைகளுக்கு இலவச செயற்கை கால் வழங்கப்பட்டது.

ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் சார்பில் 100 சிறப்பு குழந்தைகளுக்கு இலவச செயற்கைகால் வழங்கப்பட்டது. ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3201-ன், முக்கிய அங்கமாக நிகழும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுனனின் வெற்றி நிகழ்ச்சியான நில் மற்றும் நட 2024 நிகழ்வில் 100 மாற்று திறனாளிகள் குழந்தைகளுக்கு வீல் சேர் மற்றும் செயற்கை கால்கள் வழங்கப்பட்டன.

ஓரிடத்தில் இருந்து வேறு இடத்துக்கு நகரம் முடியாத சவாலை வெல்லவும், எழுந்து நிற்கவும், நடமாடவும் உதவும் நோக்கில் இந்தத் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. யாருடைய உதவியும் இன்றி தங்களது வாழ்க்கையில் தேவையானவற்றை நிறைவேற்றிக் கொள்ளவும் இயலாத எண்ணங்களை ஈடேற்றிக் கொள்ளவும் இது உதவும்.

இதற்கான விழாவில் திட்ட தலைவரும், இளைஞர்கள் சேவை ஆர்ஐடி 3201 மாவட்ட தலைவர் காட்வின் மரியா விசுவாசம் கூறுகையில், மாற்றுத்திறனாளிகள் உள்ள பல குடும்பங்களில் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் நடமாடுவதற்கான உபகரணங்கள் வாங்குவதற்கும் வசதிகள் இல்லை. இதனால் குடும்பங்களில் முன்னேற்றம் நடைபட்டுள்ளது. வயதும், நகர இயலாமையும் முக்கிய தடைகளாக உள்ளன. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு அவரது பெற்றோர்களும், கவனிப்பாளர்களும் தேவையான உதவிகளை செய்ய போராடுகின்றனர் முடிவாக, பல குழந்தைகள் படுக்கையிலேயே தங்கள் வாழ்நாளை கழித்து விடவும், இயற்கை உபாதைகளுக்கும் கூட நகர இயலாத நிலை ஏற்படுகிறது.

இந்த சிரமங்களையும் சவால்களையும் புரிந்து கொண்ட ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன். அவர்களுக்கு மாற்றங்களை தரும் தீர்வுகளைத் தர முன்வந்துள்ளது. “நில மற்றும் நட, என்ற திட்டத்தை துவக்கியது. இந்த குழந்தைகளின் கனவுகள் நனவாகவும் அவர்கள் நிற்கவும், நடக்கவும், எளிதாக நகரவும் நினசரி வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுத்தவும் இது உதவுகிறது. இதன் பயன் அவர்களது நகர்வுக்கும் மேலானது. இத்தகைய உபகரணங்களை பெற்ற பல குழந்தைகள் தற்போது பள்ளிக்குத் திரும்பி தங்களது கல்வியை தொடர்கின்றனர். தற்போது சுதந்திரமாக நடமாடுகின்றனர். வகுப்புகளுக்கு செல்கின்றனர். தங்கள் வயதுடையவர்களுடன் போட்டியிட்டு படிக்கின்றனர். இவர்களின் நீண்ட கால கனவுகள் நிறைவேறி உள்ளன. இந்தத் திட்டம் அவர்களது கல்வியை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, சமுதாய மேம்பாட்டிற்கும், எதிர்கால உலகத்திற்கும் வழிகாட்டியாக செயல்படுகிறது.” என்றார்.

உபகரணங்கள் வழங்கும் இந்த விழாவிற்கு சர்வதேச ரோட்டரி மாவட்டம் 3201 மாவட்ட ஆளுனர் ரோட்டேரியன் ஏ.எஸ்.கே. என் சுந்தரவடிவேலு தலைமை விருந்தினராக பங்கேற்றார் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் நடத்தும் நில் மற்றும் நட நிட்ட முயற்சியில் டிஎன்ஏ மாற்றுத் திறனாளிகள், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட 8 முதல் 14 வயதுக்குட்பட்ட உபகரணங்கள் தேவைப்பட்ட குழந்தைகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. இவற்றால் பயன்பெற்ற குழந்தைகள் தனித்துவமாக செயல்படவும் தங்களது வாழ்வை சுதந்திரமாக முன்னெடுத்துச் செல்லவும் உதவியாக அமைந்தது.

இந்த முயற்சிக்கு கோய்பி சஸ்பென்ஷன் இந்தியா நிறுவனம், சமுதாய பொறுப்பு திட்டத்தின் கீழ் உதவியது. டாட்”எஸ் பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரபா உதவியுடன் கிளப் 100 குழந்தைகளை அடையாளம் கண்டது. திட்டத்தின் தலைவரும், ரோட்ராக்ட் மாவட்ட இளைஞர் சேவை தலைவருமான காட்வின் மரிய விசுவாசம் பேசுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் 500-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகள் திட்டத்தால் பயனடைந்துள்ளனர். இவர்களது வாழ்க்கையிலும் குடும்பத்திலும் மாற்றங்களை நில் மற்றும் நட திட்டத்தால் டவுன் டவுன் ரோட்டரி கிளப் ஏற்படுத்தியுள்ளது. நிற்கவும் நடக்கவும் நகரவும் கிடைத்த உதவியால் தங்கள் கனவுகளை குழந்தைகள் நனவாக்க, அவர்களே நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு சுதந்திரமாக செயல்படுகின்றனர். மிக முக்கியமாக அவர்களது வாழ்க்கையில் எப்போதும் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் பள்ளிக்குத் திரும்பி கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர், “என்றார்.இந்த விழாவில் பல்வேறு சிறப்பு அழைப்பாளர்கள், துணை கவர்னர் ரோட்டேரியன் எம்டி தேவதாஸ் மேனன், ஜிஜிஆர் ரோட்டேரியன் எம்டி அஸ்வின், ரோட்ராக்ட் மாவட்ட பணியாளர்கள், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுண்டவுன் தலைவர் ரோட்டேரியன் எல்.சியாம் சங்கர், செயலாளர் அட்வகேட் ரோட்டேரியன் எஎஸ் ராமகிருஷ்ணன், ஆன்ஸ் தலைவர் சுகன்யா, ஆன்ஸ் செயலாளர் ஐஸ்வர்யா, இன்ட்ராக்டர் தலைவர் சுருதி அருள் ஆனந்த், இன்ட்ராக்டர் செயலாளர் ரிச்சல்லா காட்வின், ரோட்டரி கிளப் டவுன் டவுன் குடும்ப உறுப்பினர்கள், ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.இவ்விழா கோவை அவிநாசி ரோட்டில் உள்ள கிராண்ட் ரீஜென்ட் ஹோட்டலில் நடைபெற்றது.