அன்னவாசல் பேரூர் திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் மற்றும் நான்காண்டு சாதனை விளக்க கூட்டம் நகர செயலாளர் முகமதுரிஷா தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் ஒன்றிய செயலாளர் சந்திரன்
ஒன்றிய பெருந்தலைவர் போஸ் மற்றும் இளைஞரணி அமைப்பாளர் சண்முகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கட்சியின் இளம் பேச்சாளர் நாகை இரா. ப்ரீத்தி மகளிர் உரிமை தொகை மகளிர் இலவச பேருந்து பயணம் நான் முதல்வர் புதுமைப்பெண் திட்டம் அரசு கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குதல் உள்ளிட்ட எண்ணற்ற சாதனைகளை தமிழக முதல்வர் அறிவிக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் என்று சிறப்பு உரையாற்றினார்.
மேலும் அன்னவாசல் பகுதியில் உள்ள கட்சியின் நிர்வாகிகள் பொறுப்பாளர் மகளிர் அணியினர் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.