• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

வெடி விபத்தில் நான்கு சிறுவர்கள் தீவிர சிகிச்சை..,

ByAnandakumar

Jun 10, 2025

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி கவுண்டம்பட்டி அண்ணா நகர் தெருவில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு திருவிழா நடைபெற்றது.

திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட பட்டாசுகளில் வெடிக்காத பட்டாசுகள் குப்பை குழியில் கிடந்தன.

இன்று அங்கு விளையாடிக் கொண்டிருந்த கூலித் தொழிலாளி மணிகண்டன் என்பவரின் மகன்கள் அக்சித் வயது 08. சஞ்சித் வயது 07. மற்றும் தங்க மலையாளி மகள் மகாலட்சுமி வயது 05, மகன் மணிமாறன் வயது 08, ஆகியோர்கள் குப்பையில் இருந்த வெடிக்காத பட்டாசு வெடிகளை எடுத்து கல்லால் குத்தியுள்ளனர்.
அப்போது எதிர்பாராமல் வெடித்த வெடியால் மணிகண்டன் மகன்கள் அக்சித், சஞ்சித் ஆகியோர்களுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அருகில் இருந்தவர்கள் இரண்டு சிறுவர்களையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார். உடன் இருந்த மகாலட்சுமி அவரது அண்ணன் மணி மாறன் இருவரும் முதல் சிகிச்சை பெற்று சுகமாக வீட்டில் இருந்து வருகிறார்.

இத்தகவல் அறிந்த குளித்தலை வட்டாட்சியர் இந்துமதி, குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இது குறித்து நங்கவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.