மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள பசுமலை பகுதியில் பயணிகள் நிழல் குடை கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது இதில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டார்.

பீகார் தாக்கம் தமிழகத்தில் ஏற்படும் என பிரதமர் மோடி கூறியது குறித்த கேள்விக்கு:
ஒரு தாக்கமும் ஏற்படப்போவதில்லை. அங்கு பத்தாயிரம் கொடுத்து வாக்கை திருடி, எஸ் ஐ ஆர் மூலமாக வாக்கை தடுத்தார்கள் அதே போல தமிழகத்தில் எஸ் ஐ ஆர் மூலமாக வாக்கை தடுக்கலாம் என்று மோடி நினைக்கிறார் தமிழகத்தில் அது செல்லுபடி ஆகாது தமிழகத்தில் இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்.
தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி குறித்த கேள்விக்கு:

முடிவு செய்தால் சொல்வார்கள் இப்போது நாங்கள் இந்தியா கூட்டணியில் பலமாக இருக்கிறோம். 2016 இல் திமுகவுடன் தொடங்கிய கூட்டணி 2019 என வெற்றி கூட்டணியாக இருக்கிறது இந்த கூட்டணியில் எந்தவித மாற்றமும் இப்போதைக்கு இல்லை. இது பற்றிய யூகங்களுக்கும் கற்பனை கதைகளுக்கும் பதில் சொல்வது நியாயமாக இருக்காது.
மதுரை, கோவை மெட்ரோ திட்டத்தை தடுத்தது குறித்த கேள்விக்கு:
இது தமிழ்நாட்டுக்கு செய்கின்ற துரோகம். ஆர்எஸ்எஸ், பாஜகவின் டிஎன்ஏவில் இருக்கின்ற பிரச்சனை அவர்கள் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை காட்டியிருக்கிறார்கள். மக்கள் தொகை அடிப்படையில் மதுரை கோயம்புத்தூருக்கு இதை நிராகரித்திருக்கிறார்கள் என்றால் ஆக்ரா மற்றும் சூரத் உள்ளிட்ட இடங்களுக்கு கொடுத்திருக்க முடியாது. இந்த நிலை ஆர்எஸ்எஸ் பிஜேபியின் தமிழக எதிர்ப்பு என்பதுதான் தமிழர்களுக்கு உரிய நியாயத்தை கொடுக்கக் கூடாது நமக்கு கிடைக்க வேண்டியவைகளை போராடித்தான் பெறவேண்டும். எய்ம்ஸ் ஆக இருந்தாலும் சென்னை மெட்ரோவாக இருந்தாலும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் போராடி பெற வேண்டியதாக உள்ளது. மதுரைக்கு மெட்ரோ வரும் அவசியம் போராடி பெறுவோம்.
எஸ் ஐ ஆர் இல் பணி புரியும் விஎல்ஓக்கள் கூடுதல் கால அவகாசம் கேட்பது குறித்த கேள்விக்கு:
நியாயமானது. ஞானேஸ்வர் குமார் போன்ற தேர்தல் ஆணையர்கள் டெல்லியில் ஏசி அறையில் அமர்ந்து கொண்டு எடுக்கின்ற முடிவுகளுக்கு சாதாரண விஎல்ஓக்கள் படுகின்ற கஷ்டங்களை பார்க்க முடிகிறது அவர்களின் வேலைப்பளு காரணமாக மன அழுத்தம் மிகப்பெரிய அளவில் ஏற்படும் அவர்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்பட்டு நியாயமான அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். 200 வீடுகளுக்கு சென்று ஆயிரம் வாக்காளர்களை அவர்கள் விசாரித்து ஆவணங்களை பெற்று, வாக்காளர்களை சந்திப்பது சாதாரண வேலையில்லை, ஒரு நாள் ஞானேஸ்வர் குமார் ஒரு பூத்தில், 20 நாளைக்குள் செய்து காட்டட்டும் அப்போது அவருக்கு வழி தெரியும். ஏழை மக்களின் வாக்குகளை நீக்குவதற்கான சதித்திட்டம் இதை முறியடிப்பதற்காக தொடர்ந்து இந்தியா கூட்டணியின் தோழர்கள் பி எல் ஏ 2வாக பணியாற்றுகிறார்கள். எங்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு தமிழர்களின் வாக்குகளை காப்பாற்றுவதில் முழுமையாக இருக்கிறோம்.
2002ல் இருப்பவர்களுக்கு மட்டும் வாக்கு என்பது குறித்த கேள்விக்கு:

2002ல் எந்த வாக்கு சாவடியில் வாக்களித்திருக்கிறார்களோ அந்த வாக்கு சாவடியில் இருக்கின்ற அந்த பி எல் ஓக்களிடம் கேட்டால் அதற்கான விண்ணப்பங்களை கொடுப்பார்கள். அப்படி இருக்கும் போது 2002 மற்றும் 2005 ஏன் எழுத வேண்டும். அப்போது வாக்கு இல்லாதவர்கள் புதிதாக பதிய வேண்டிய நேரம் உள்ளது. ஏற்கனவே சொன்னது போல சூரி பரோட்டா சாப்பிட்டது போல மறுபடியும் அழித்து முதலிலிருந்து வாக்குகளை சேர்க்க வேண்டி இருக்கும். எஸ் ஐ ஆர் ஐ பொறுத்த அளவில் ஏழை மக்களை துன்புறுத்துகின்றது. சாமானிய மக்கள் வாக்குகளை தேடி அலைய வேண்டிய சூழல் உள்ளது. 2002ல் 60 சதவீத வாக்குகள் தான் இருந்தது இப்போது 40 சதவீத வாக்குகள் கூடியிருக்கிறது அப்படி இருக்கும்போது இந்த வாக்குகளை நான்கு முதல் ஐந்து லட்சம் பேர் வாக்குகளை தேடி சேர்ப்பதற்கு அலைக்கழிக்கப்படுவது மோடி அமைச்சாவின் ஆங்காரத்தை காட்டுகிறது எனக் கூறினார்.








