மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றி மிகப்பெரிய து துரோகத்தை மத்திய அரசு செய்து இருப்பதாகவும் மகாத்மா காந்தியை கொலை செய்தவர்கள் தான் இவர்கள் எனவும் காங்கிரஸ் கட்சி அறிமுகப்படுத்திய இந்தத் திட்டத்தில் நாடு முழுவதும் பணிகள் நடைபெற்று வந்ததாகவும் காங்கிரஸ் கட்சி அறிமுகப்படுத்திய இந்த திட்டத்தில் மக்கள் வேலை கேட்டால் உடனடியாக வேலை வழங்கியதாகவும் ஆனால் தற்பொழுது பணிக்கான அனுமதி வழங்கினால் மட்டுமே மக்களுக்கு வேலை கிடைப்பதாகவும் தாங்கள் அறிமுகப்படுத்திய இந்தத் திட்டத்தில் 90% சம்பளத்தை மத்திய அரசு வழங்கி மீதி 10% சம்பளத்தை மாநில அரசு வழங்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சி இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதாகவும் ஆனால் தற்பொழுது 60% மட்டும் தான் மத்திய அரசு வழங்குவதாகவும் 40% மாநில அரசு வழங்கும் விதமாக திட்டத்தை மாற்றி விட்டதாகவும் இது மாநில அரசின் கையிருப்பை பாதிக்கக்கூடிய அளவில் இருப்பதாகவும் தற்பொழுது மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை புதிய பெயரில் அறிவிக்கப்பட்டிருப்பது யாரும் எளிதில் புரிந்து கொள்ள முடியாது எனவும் ஹிந்தியை மட்டும் தாய்மொழியாக கொண்டவர்களும் ஹிந்தி மாநிலத்திலிருந்து வரக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட இதை படிக்க முடியாத அளவிற்கு மாற்றியமைத்து இருப்பதாகவும் மோடி பாராளுமன்றத்தில் பேசும் பொழுது இந்தத் திட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம் எனவும் ஆனால் காங்கிரஸ் கட்சியின் படுதோல்வியின் சின்னமாக இந்த திட்டம் இருக்க வேண்டும்.
தன்னுடைய உள்மனது உரியதாக மோடி பாராளுமன்றத்தில் உரையாற்றியதாகவும் ஆனால் தற்பொழுது இந்தத் திட்டம் முற்றிலுமாக மாற்றப்பட்டு விட்டதாகவும் இந்தியா முழுவதும் 12 கோடி பேர் பணியை செய்து வந்ததாகவும் இதை நம்பியே பல குடும்பங்களில் அடுப்பு எரிவதாகவும் ஆனால் தற்பொழுது அந்த நிலை முற்றிலுமாக மாற்றப்பட்டு விட்டதாகவும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் போது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை அனைவருக்கும் 100 நாட்கள் வேலை வழங்கியதாகவும் ஆனால் தற்பொழுது மோடி அரசு இத்திட்டத்தை சிதைத்து மிகக் குறைந்த நாட்கள் மட்டுமே வேலை வணங்குவதாகவும் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சி தலைமை ஒரு குழுவை ஏற்படுத்தி இருப்பதாகவும் அந்த குழு தமிழக முதலமைச்சரை சந்தித்ததாகவும் அப்பொழுது தமிழக முதலமைச்சர் தங்களுடைய கட்சி சார்பாக குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும் இரு குழுக்களும் பேசி எடுக்கக்கூடிய முடிவை அறிவிப்பதாக தெரிவித்ததாகவும் எனவே தலைமை தெரிவிக்கின்ற கருத்தை மட்டுமே தான் கூற முடியும் என தெரிவித்தார் மேலும் எஸ் ஐ ஆர் பணி குறித்து கடும் அதிருப்தியை தெரிவித்த ப. சிதம்பரம் பல்வேறு இடங்களில் முகவரி இல்லை என கூறி இருப்பது விந்தையாக இருப்பதாகவும் இந்தியாவில் முகவரி இல்லாதவர்கள் எங்கு இருக்கிறார்கள் என தனக்கு தெரியவில்லை எனவும் தங்களுடைய தொகுதியில் கூட ஒரே வார்டில் 19 பேர் நீக்கப்பட்டு விட்டதாகவும் SiR பட்டியல் சரிபார்ப்பு பணியில் பணியாற்றுபவர்கள் தமிழக அரசிடம் பணியாற்றினாலும் இந்த பணியை செய்யும் பொழுது அவர்கள் தேர்தல் ஆணையத்தின் பணியாளராக மாறி விடுவார்கள் எனவும் வட மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் ஏற்க முடியாது எனவும் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மோடி கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்று இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் நடிகர் சிவாஜி கணேசன் போன்று சிறப்பாக நடிப்பதாகவும் தெரிவித்தார்.




