• Tue. Dec 23rd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு..,

ByKalamegam Viswanathan

Dec 23, 2025

மதுரை மாநகர் மாவட்ட அதிமுக கட்சியின் சார்பில் புதிய வரைவு வாக்காளர் பட்டியல் குறித்த ஆலோசனைக் கூட்டம் தெப்பக்குளம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் முன்னாள் அமைச்சரும் செல்லூர் கே ராஜு க்ஷ தலைமையில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மட்டன் பிரியாணி,புரோட்டா, சுக்காக
முட்டை, என கமகம விருந்து ஏற்பாடு செய்திருந்தார்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நிர்வாகிகள் மத்தியில் பேசுகையில்,

ஏப்பா சுடச்சுட பிரியாணி, புரோட்டா, சுக்காக, முட்டை எல்லாம் செஞ்சு வச்சுருக்கு, யாரும் சாப்பிடாம போயிறாதீங்கப்பா மிச்சமாகி வீணாகிடும் என்று நகைச்சுவையாக கூறினார்.

அதிமுகவில் உழைப்பவர்களுக்கு மட்டுமே மரியாதை ஏமாற்றுபவர்களுக்கு கிடையாது..

சூப்பர் ஸ்டார் சொல்வது போல் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வருவார் அதேபோல் தான் எடப்பாடி பழனிச்சாமியும்..

கை தட்ட மாட்டீங்களா? பிரியாணி எல்லாருக்கும் இருக்கு..

திமுகவை அகற்ற வேண்டும் என்றால் ஒத்த கருத்துடன் இருப்பவர்கள் யார் என்றாலும் வரலாம் என புரட்சித்தலைவர் சொன்னார்.

போதையை கட்டுப்படுத்த இந்த அரசுக்கு வக்கில்லை..

இப்போது சினிமாவில் எதை எடுத்தாலும் வன்முறை சுட்டு கொண்டே இருக்கிறார்கள்.. வன்முறை தலைவிரித்து ஆடுகிறது..

சென்சார் போர்ட் இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை..

எத்தனை கூட்டணி சேர்ந்தாலும், எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும், திமுக அதிமுக இடையே தான் போட்டி.

முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

நாளைக்கு ஸ்டாலின் அல்ல உதயநிதி ஸ்டாலின் வந்தாலும் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க வேண்டும் அதுதான் அவர்களுடைய நிலைப்பாடு.

கட்சி ஆரம்பித்த சினிமா நடிகர்கள் எல்லோரும் எம்ஜிஆரின் புகழைதான் பாடுகிறார்கள்.

முதலமைச்சர் ஸ்டாலின் என்றைக்காவது கலைஞர் ஆட்சியை அமைப்பேன் என்று சொல்லியுள்ளாரா? அவரே என் பெரியப்பா எம்.ஜி.ஆர் என்று தான் சொல்கிறார்.

அதிமுகவில் இருந்து யார் விலகினாலும், எந்த ஒரு இழப்பும் இல்லை.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலங்களில் எத்தனையோ பேர் விலகினாலும் அதை பற்றி கவலைப்படாமல் தொண்டரை நம்பி தான் இருந்தார்கள்.

எடப்பாடி பழனிசாமியும் தொண்டர்களை நம்பி தான் உள்ளார், அதை வெளியில் தான் சொல்லவில்லை.

திமுக நான்கரை ஆண்டுகளாக மதுரைக்கு என்ன செய்தது.. எதுவும் செய்யவில்லை.. இதை சொல்லியே நாம் ஓட்டு வாங்கிவிடலாம்..

மதுரை மாநகராட்சி ஊழல் ஒன்று போதாதா மாநகரின் நான்கு தொகுதியை வெற்றி பெற.. மூர்த்தி அல்ல மும்மூர்த்தி வந்தாலும் மதுரை மக்கள் கொதித்து போய் இருக்கிறார்கள்.

விடுபட்டவர்களை வாக்காளராக சேர்க்க வேண்டும் இதை செய்தால் நூற்றுக்கு நூறு சதவீதம் மதுரை நான்கு தொகுதிகளில் யாரை நிறுத்தினாலும் அதிமுக வெற்றி பெறும்..

எஸ் ஐ ஆரில் எங்களுடைய குடும்ப ஓட்டையே பிரிச்சுட்டாங்க.. கலெக்டரிடம் குடும்பம் ஒற்றுமையாக இருந்தால் தான் நல்லது என சொன்னேன் என்றார்.