கோவில் மாநகராக, தூங்கா நகராக இருந்த மதுரை, கொலை நகராக மாறிவிட்ட அச்சத்தில் மக்கள் இருக்கிறார்கள் – இதை தட்டி கேட்காத மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டியளித்தார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் அதிமுக சார்பில் போதை பொருள் ஓழிப்பு மற்றும் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக துண்டு பிரசுரங்களை வழங்கும் விழா முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி துணைத்தலைவருமான
ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமார்.,
மதுரை மாவட்டத்தில் சமூக விரோத செயல்கள் அதிகரித்து கொண்டே வருகிறது., கடந்த இரு வாரத்தில் மட்டும் 11 கொலைகள் நடந்துள்ளது.,
இதை போலீசார் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டிய நிலை உள்ளது, அரசியல் காரணங்களுக்காகவும், நகைக்காகவும் கொலைகள் நடக்கின்றது., கொலை, கொள்ளை, நகை, பணம் பறிப்பு உள்ளிட்ட சமூக விரோத செயல்களை பெரும்பாலும் இளைய சமுதாயத்தினரை குறி வைத்து அவர்களை கூலிப்படைகளாக செயல்பட வைக்கின்றனர்.
கோவில் மாநகராக இருந்த மதுரையில் அன்மை காலமாக சமூக விரோதிகளின் கூடாரமாக, அவர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பணத்திற்காக கடத்தல் சம்பவங்கள், கொலை சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருவதால் மக்கள் வெளியே வருவதற்கே அச்சத்தோடு இருக்கிறார்கள்.
மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு வாரத்தில் 11 கொலைகள் நடந்துள்ளது, ஜூலை 3ஆம் தேதி முதல் நேற்று வரை 11 கொலைகள், தனியாக செல்பவர்களிடம் நகை பறிப்பு, குழந்தைகளை கடத்துவது என தொடர்கிறது.

தூங்கா நகரான இந்த மதுரை மாநகரம், இன்று கொலை நகராக மாறிவிட்ட அச்சத்தில் மக்கள் இருக்கிறார்கள், இதை தட்டி கேட்க துப்பு இல்லாத மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என மக்கள் இயக்கமாக நடத்தி வருகிறோம் என பேட்டியளித்தார்.
இதில் தேமுதிக பொதுக்குழு உறுப்பினர் கருமாத்தூர் பாண்டி, செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா, முன்னாள் எம்எல்ஏ ஐ.மகேந்திரன், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் துரைதனராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் மகேந்திர பாண்டி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ரகு, முன்னாள் எம்எல்ஏ தவசி, உசிலம்பட்டி நகர செயலாளர் பூமா ராஜா மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
