திருத்தங்கல் சகாரா கிரிக்கெட் கிளப் சார்பில், 2ஆம் ஆண்டு சின்னா நினைவு கோப்பை கிரிக்கெட் போட்டி 2025 நடத்துவதற்கு, அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் அதிமுக மேற்கு மாவட்டச் செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி நிதியுதவி வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் சகாரா கிரிக்கெட் கிளப் சார்பில், இரண்டாம் ஆம் ஆண்டு சின்னா நினைவு கோப்பை கிரிக்கெட் போட்டி 2025 நடத்துவதற்கு சகாரா கிரிக்கெட் கிளப் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். மேலும் கிரிக்கெட் போட்டியை முன்னாள் அமைச்சரும் விருதுநகர் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளருமான கே. டி.ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கி கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைக்க வருமாறு அழைப்பு விடுத்தனர். அதனை ஏற்று ரூ20ஆயிரம் நிதி வழங்கினார்.
இந்நிகழ்வின்போது கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.