• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கல்லூரி மாணவியின் மருத்துவ செலவிற்கு நிதி வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி

ByK Kaliraj

Apr 20, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நந்தவனத் தெருவை சேர்ந்த முத்துராமலிங்கம் நாகலட்சுமி இவர்களது மகள் சுப்புலட்சுமி நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார்.

உடல் நலக்குறைவினால் சிகிச்சை பெற்று வருகிறார். ஏழை மாணவி என்பதால் மருத்துவ செலவிற்கு உதவி செய்ய வேண்டும் என அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜியிடம் வேண்டுகோள் விடுத்தனர். அதனை ஏற்று முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி நர்சிங் கல்லூரி மாணவி சுப்புலட்சுமிக்கு உடனடியாக நிதி வழங்கி உடல் நலத்தை கவனிக்குமாறு கூறினார்.