விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகர அதிமுக சார்பில் பூத் செயலாளர்கள் மற்றும் பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடியார் உத்தரவின் பேரில் முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலருமான கே டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் ராஜாபாளையத்தில் நடைபெற்றது.

சிறுபான்மையினர் நலப்பிரிவு பொருளாளர் ஜான் மகேந்திரன் கலந்துகொண்டு தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்கினார். மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட இணை செயலாளர்அழகு ராணி, நகர செயலாளர்கள் பரமசிவம் ,துரை முருகேசன், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.