தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கும் கரூர் துயர சம்பவத்தையும் சம்பந்தப்படுத்தி பேசுவது நகைப்பிற்குரியது உள்ளது என செங்கோட்டையன் விமர்சனத்திற்கு பதிலடி…
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ல் “விடியா ஆட்சி உங்கள் வீட்டு Bill-லே சாட்சி” என்ற தலைப்பில், விழிப்புணர்வு பிரச்சாரம் விருதுநகர் மாவட்டத்தின் சார்பில் சிவகாசி தொகுதியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கும் கரூர் துயர சம்பவத்தையும் சம்பந்தப்படுத்தி பேசுவது நகைப்பிற்குரியது உள்ளது
உயிரிழந்த 41 உயிர்களை கேலி பேசுவது போல, கிண்டல் பேசுவது போல அந்த உயிர்களுக்கு அனுதாபம் தெரிவிக்காமலும் எல்லி நகையாடுவது தவெகவிற்கு அழகல்ல
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் என்பது போராட்டத்தில் ஏற்பட்டது, கரூர் கூட்டத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் விஜயை பார்க்க வந்து உயிரிழந்தவர்கள்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு இபிஎஸ் செல்லவில்லை என செங்கோட்டையன் விமர்சனத்திற்கு முன்னாள் அமைச்சருக்கு டி ராஜேந்திர பாலாஜி பதிலடி
திமுகவிற்கும் தவெகாவிற்கும் போட்டி என செங்கோட்டையன் கூறுவது பூனை கண்ணை மூடி கொண்டால் உலகம் இருண்டது என நினைப்பது போல் செங்கோட்டையன் பேச்சு உள்ளது
யாரு யாருக்கு போட்டி என்பதெல்லாம் தேர்தலுக்கு பின்னர் தெரியவரும்
ஒவ்வொரு கட்சிகளின் வண்டவாளம் தண்டவாளங்கள் தேர்தலுக்குப் பின்னர் தான் தெரிய வரும்
மக்கள் ஏற்றுக் கொண்ட தலைவராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி தான் சனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று முதல்வராவார்
டிடிவி தினகரன் அதிமுக கூட்டணிக்கு வருகை தந்துள்ளதால் ஜெயலலிதா காலத்தில் இருந்த அதிமுகவின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் அதிமுக கூட்டணிக்கு வருவது உறுதியாகியுள்ளது

திமுகவை ஆட்சியை விட்டு விரட்ட வேண்டும் என்பதுதான் கேப்டன் விஜயகாந்தின் கொள்கையாக இருந்தது, அதை முன் வைத்து தேமுதிக முடிவெடுப்பார்கள் என நம்புகிறேன்
எடப்பாடி பழனிச்சாமி கூட்டணிக்காக யார் வீட்டு வாசலில் தட்டப் போவதில்லை
கூட்டணியை மேலும் மேலும் பலப்படுத்தவே கூட்டணி கட்சிகளை இணைக்க முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்
அதற்காக அதிமுக பலவீனமானவர்கள் அல்ல
யாரிடமும் மடிப்பிச்சை கேட்கும் அளவிற்கு அதிமுக பலவீனமாக இல்லை
இதை எங்களுடன் கூட்டணிக்கு வரும் கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும்
எடப்பாடி யார் பலவீனமானவர் அல்ல பலம் பொருந்திய தலைவர்
திமுக கட்சியை பொறுத்தவரை ஆட்சியில் பங்கு கொடுக்காது, அதிமுகவும் அதேபோல ஆட்சியில் பங்கு கொடுக்காது
சின்ன சின்ன கட்சிகலையேல்லாம் கூட்டு சேர்ப்பதால் தாங்கள் பெரிய பலமான கட்சி என கூட்டணி கட்சிகள் நினைத்துக்கொள்வது தவறான பிற்போக்கு
அதிமுக திமுக பலமான இயக்கங்களாக உருவாகியுள்ளது
இருவரும் இயக்கங்கள் தான் களத்தில் நின்று களமாட கூடியவை
கூட்டணியில் சேரக்கூடிய கட்சிகள் எல்லாம் ஆட்சியில் பங்கு எனவும், எங்களால் தான் வெற்றி பெற்றார்கள் என சொல்வதெல்லாம் கேலிக்குரியது விளையாட்டுக்குரியது- கூட்டணி கட்சிகளை விமர்சனம்
2026 சட்டமன்றத் தேர்தலை பொருத்தவரை எடப்பாடிக்கும் ஸ்டாலினுக்குமான தேர்தல்
எடப்பாடி பழனிச்சாமி வெள்ளப் போகிறார் ஸ்டாலின் விழப் போகிறார்
இதுதான் நடக்கப்போகும் உண்மை, இதைத் தாண்டி எங்களால்தான் வெற்றி என்று கூட்டணிக்குள் முடிவெடுக்காமல் தேர்தல் முடிந்த பிறகு ஐந்து மாதம் கழித்து கூட முடிவெடுத்து சொல்லிக் கொள்ளலாம்
யானை மீது அமர்ந்து செல்வபவர்கள் தாங்கள்தான் ராஜா என சொல்லிக்கொள்வார்கள், யானை தும்பிக்கையால் அடித்து தள்ளினால் செல்லுமிடம் தெரியாமல் சென்று விடுவார்கள்










