• Tue. Feb 24th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 ஆவது பிறந்தநாள் விழா..,

Byமுகமதி

Feb 24, 2026

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 ஆவது பிறந்தநாளில் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு பழங்கள், பிஸ்கட், வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கே.வி.எஸ் பழனிவேல் தலைமையில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் பெரியசாமி முன்னிலையில் ஆலங்குடி பேருந்து நிலையம், வடகாடு முக்கம், சந்தைப்பேட்டை ஆகிய இடங்களில் வெடிவெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் ஆலங்குடி முன்னாள் பேரூராட்சித்தலைவர் வர்த்தக சங்கத் தலைவர் மனமோகன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சித்திரைக்கண்ணு, நகர எம்ஜிஆர் மன்றச் செயலாளர் மாரியப்பன், ஆண்டிகுளம் தங்கராஜ், முன்னாள் கவுன்சிலர் அழகர், மாவட்ட சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் ராஜா மரியதாஸ், எழுத்தர் நாடிமுத்து, மாவட்ட பேரவையின் செயலாளர் ரெங்கநாதன், நகர எம் ஜி ஆர் மன்றப் பொருளாளர் சேகர், மாவட்டப் பிரதிநிதி எல்ஐசி குமார், நூர் முகமது, முன்னாள் கவுன்சிலர் ஐயப்பன், வார்டு செயலாளர்கள் பிளாட்ராமன், இரத்தினம், நடராஜன், மணி, சுபாஷ், கார்த்தி, பிரபு, மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதேபோல அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் புரட்சித்தமிழர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க
புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழக செயலாளர், முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்களின் அறிவுறுத்தலின்படி
திருவரங்குளம் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர், மாஞ்சன்விடுதி ராஜேந்திரன்
அவர்களின் தலைமையில், அம்மா அவர்களின் 78-வது பிறந்தநாள் விழா ஆலங்குடி தொகுதி திருவரங்குளம் மேற்கு ஒன்றியம் மாஞ்சன் விடுதி, கொத்தக்கோட்டை ஊராட்சி, வம்பன் நால் ரோட்டில் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் மாவட்ட அணி பொறுப்பாளர்கள் ஒன்றிய அணிச் செயலாளர்கள் கிளைக் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.