• Fri. Oct 31st, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

முன்னாள் அதிமுக எம்பி டி.ராதாகிருஷ்ணன் உடலுக்கு
முன்னாள் அமைச்சர்கள் அஞ்சலி

Byதரணி

Dec 12, 2022

சிவகாசியில் முன்னாள் அதிமுக எம்பி டி.ராதாகிருஷ்ணன் (67) உடலுக்கு முன்னாள் அமைச்சர்கள் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

சிவகாசி அருகே வடபட்டியை சேர்ந்தவர் டி.ராதாகிருஷ்ணன் (67).
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற விருதுநகர் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுகவில் 30ஆண்டுகளுக்கு மேலாக பயணித்த ராதாகிருஷ்ணன் விருதுநகர் மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளராகவும், 3 முறை சிவகாசி ஊராட்சி ஒன்றிய தலைவராகவும் இருந்துள்ளார் அதிமுகவில் பல்வேறு பதவிகள் வகித்த இவர் கடைசியாக விருதுநகர் மேற்கு மாவட்ட கழக துணை செயலாளராக இருந்தார். நேற்றுமுன்தினம் மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு விரைந்த முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ராதாகிருஷ்ணன் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். அதனை தெர்டர்ந்து ராதாகிருஷ்ணன் உடல் அவரது சொந்த கிராமமான வடபட்டிக்கு கொண்டு வரப்படடது. அங்கு ராதாகிருஷ்ணன் உடலுக்கு அதிமுக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். முன்னதாக மறைந்த ராதாகிருஷ்ணனின் மகன் தர்மராஜவை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். இந்நிலையில் டி. ராதாகிருஷ்ணன் இறுதி சடங்குகள் அவரது சொந்த ஊரான சிவகாசி அருகே உள்ள வடபட்டி மேலூர் கிராமத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இறுதி சடங்கில் டி.ராதாகிருஷ்ணன் உடலுக்கு கழக அவைத்தலைவர் தமிழ்மகன்உசேன், அதிமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக துணை பொதுசெயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன், அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன், அதிமுக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி, அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைசச்ர் செல்லூர் கே. ராஜூ, கழக கொள்கை பரப்பு துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மாபா பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், முன்னாள் எம்பிகள் பார்த்திபன், உதயகுமார், கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்பி லிங்கம், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ்சத்தியன், திருவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் மான்ராஜ், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், சந்திரபிரபா முத்தையா, பாஜக கோபால்சாமி, கம்யூனிஸ்ட் பொன்னுபாண்டியன், கம்யூனிஸ்ட் ராமசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்திமான்ராஜ், துணைத்தலைவர் சுபாஷினி, மாவட்ட கழக இணை செயலாளர் அழகுராணி, அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் கலாநிதி, சிவகாசி மாநகர பகுதி கழக செயலாளர்கள் சரவணக்குமார். கருப்பசாமிபாண்டியன், சாம்(எ)அபினேஷ்வரன், சிவகாசி ஒன்றிய கழகச் செயலாளர்கள் ஆரோக்கியம், புதுப்பட்டி கருப்பசாமி, வெங்கடேஷ், மாவட்ட மருத்துவர் பிரிவு செயலாளர் டாக்டர் விஜய் ஆனந்த், விருதுநகர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் சித்துராஜபுரம் பாலாஜி, மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் முத்தையா, சிவகாசி கிழக்கு ஒன்றிய கழக இணைச் செயலாளர் விஸ்வநத்தம் மணிகண்டன், திருத்தங்கல் கூட்டுறவு வங்கி தலைவர் ரமணா, சிவகாசி மாநகர கவுன்சிலர் கரைமுருகன், வத்ராப் ஒன்றிய செயலாளர் சுப்புராஜ், விருதுநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்பு பிரிவு செயலாளர் பாண்டியராஜன், தலைவர் எம்.கே.என்.செல்வம், திருத்தங்கல் முன்னாள் நகர கழக செயலாளர் முருகேசன் மற்றும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள், மாநகர பகுதி கழக செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் பல்வேறு கட்சி நிர்வாகிகள், தொழில் அதிபர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலத்தில் அனைவரும் கலந்து கொண்டனர். அங்கு நடைபெற்ற இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் கட்சியினர் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.