ஐரோப்பிய பாரம்பரிய முறைப்படி மதுரையில் கிறிஸ்மஸ் மற்றும் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தயாராகும் 300 கிலோ பிரம்மாண்ட கேக் – 80 kg எடையுள்ள ப்ரூம்ஸ், திராட்சை, செர்ரி, வால்நட், பிஸ்தா, முந்திரி, பேரிச்சை உள்ளிட்ட பல்வேறு உலர் பழங்களுடன் உயர்ரக மதுபானங்களில் கலவையாக சேர்க்கப்பட்டு 30 நாட்கள் பதப்படுத்த தயார் செய்யப்பட்டது*

நமது கலாச்சாரத்தில் அறுவடையை போற்றும் விதமாக பொங்கல் திருவிழா கொண்டாடுவது போல் ஐரோப்பிய நாடுகளில் அறுவடை திருவிழாவினை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் தொடக்கமாக குளிர்கால துவக்கத்தை கேக் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அடுத்த மாதம் 25ஆம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் 2026 புத்தாண்டு தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் அனைத்து பகுதிகளிலும் கேக்கு உற்பத்தி செய்யும் பணியானது துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று மதுரைசிந்தாமணி ரிங் ரோடு பகுதியில் உள்ள GRT கிராண்ட் நட்சத்திர விடுதியில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஐரோப்பிய பாரம்பரிய முறைப்படி கேக் திருவிழாவிற்காக கேக் தயாரிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
300 கிலோ எடைக்கு மேல் இந்த பிரம்மாண்ட கேக்கில் 80 kg எடையுள்ள செர்ரி, வால்நட், பேரிச்சை, பிஸ்தா ,முந்திரி, ப்ரூம்ஸ் உள்ளிட்ட பல்வேறு உலர் பழங்களுடன் உயர்ரக மதுபானங்களில் கலவையாக 30 நாட்கள் நன்கு பதப்படுத்தப்பட்டு வைக்கப்படும் பின்பு 30 நாள் கழித்து அந்தப் பதப்படுத்தப்பட்டுள்ள உயர் பழங்கள் பிரமாண்டமான 300 கிலோ எடை கேக்குடன் கலந்து சேர்க்கப்படும் .
முன்னதாக உலர் பழங்கள்மேடையில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டது.

கிராண்ட்ஹோட்டல் சமையல் கலைஞர்கள் ஜெர்மனி, இத்தாலி, கவிடன் நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளுர் பிரமுகர்கள் முன்னிலையில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் உலர் பழங்கள் மற்றும் உயர்ரக மதுபானங்களை கலந்து கிறிஸ்மஸ் ஸ்மஸ் பாடல் பாடி சேகரித்தனர் .
கேக் தயாரிக்கும் நிகழ்ச்சிக்கு முன்னோட்டமாக கிறிஸ்மஸ் மரம் கருணை இல்ல குழந்தைகளின் மூலம் செடிகளை கொண்டு அலங்கரிக்கப்பட்டு மின்விளக்கு ஏற்றப்பட்டது .
300 கிலோ எடையில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் கேக் கிறிஸ்மஸ் பண்டிகை தினம் மற்றும் புத்தாண்டு தின கொண்டாட்டங்களில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என GRT கிராண்ட்பொது மேலாளர் இளங்கோ ராஜேந்திரன் கூறினார் .
ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் நான் ஜெர்மனியை சேர்ந்தவர் தற்போது இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ளேன் கிறிஸ்மஸ் நிகழ்வில் கேக் தயாரிக்கும் விழாவில் கலந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் என கூறினார் .
முதுநிலை சமையல்கலை கலைஞர் கணேஷ் கூறுகையில் 80 கிலோ எடை கொண்ட உலர் பழங்கள் மற்றும் உயர் ரக மது பானங்கள் கொண்டு பதப்படுத்தப்பட்ட பழ கலவைகள் 300 கிலோ எடையுள்ள கேக் தயாரிக்கப்படும். கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுகளில் கலந்து கொள்ள வரும் அனைவருக்கும் வழங்கப்படும் என கூறினார் .











; ?>)
; ?>)
; ?>)