• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

குமரி நீர் நிலைகள் சதுப்பு நில பகுதிகளைதேடி வரும் வெளி நாட்டு பறவைகள்

நடப்பு ஆண்டான 2025_ம் ஆண்டிற்க்கானபறவைகள் கணக்கெடுப்பு பணி நமது குமரி மாவட்டத்திலும் மார்ச் 09 மற்றும் 16 -ம் தேதி மாலை வரை நடைபெற்றன. பறவைகள் கணக்கெடுப்பு குறித்து குமரி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரினக்காப்பாளர் பிரசாந்த் I.F.S அவர்கள் கூறியதாவது,

தமிழகத்தில் ஆண்டுத்தோறும் கோடை காலத்தில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு செய்வது வழக்கம். அதே போல் நமது குமரி மாவட்டத்திலும் இந்தாண்டு மார்ச் 09 -ம் தேதி ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு சுசீந்திரம், தேரூர், தத்தையார் குளம், புத்தேரி, புத்தளம், சுவாமி தோப்பு, முட்டம், இறச்சகுளம், இராஜாக்கமங்கலம் என சுமார் 25-க்கு மேற்பட்ட இடங்களில் ஈரநிலம் மற்றும் சதுப்பு நில பகுதிகளிலும் கணக்கெடுப்பு நடை பெற்றது. அதனை தொடர்ந்து இன்று 16-ம் தேதி யன்று நமது மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி, அழகிய பாண்டியபுரம் , வேளிமலை, குலசேகரம், களியல் ஆகிய ஐந்து வனச்சரக பகுதிகளில் உள்ள புறநகர் மற்றும் வனப்பகுதிகளிலும் வாழும் பறவை இனங்கள் குறித்தும் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றது.

இக்கணக்கெடுப்பு பணிகளுக்காக துறை சார்ந்த பணியாளர்கள் 65, தன்னார்வலர்கள் என சுமார் 75 நபர்கள் ஈடுப்படுத்தப்பட்டார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளராகிய E. பிரசாந்த் ;I.F.S ஆகிய எனது தலைமையில், மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் மற்றும் பயிற்சி உதவி வனப்பாது காவலர் ஆலோசனையில் பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் ரவீந்திரன் அவர்கள் ஏற்பாட்டினை செய்தார்கள்.