• Thu. Apr 24th, 2025

தீபாவளிக்கு வெடிகளை தவிர்த்து, செடிகளை நட்ட இளைஞர்கள்..!

ByP.Thangapandi

Nov 13, 2023

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் சில ஆண்டுகளாக இளைஞர்கள் மரக்கன்று கள் நட்டு பராமரிப்பதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த வருடம் போன வருடத்தை காட்டிலும் வெடி போடுவது குறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக தீபாவளி அன்று வெடியை தவிர்த்து மரங்களை நட வேண்டும் என முடிவெடுத்த செல்லம்பட்டி ஒன்றியம் பசுக்காரன்பட்டியில் கிராம வளர்ச்சிக் குழு இளைஞர்கள் ஒன்றிணைந்து

பசுக்காரன்பட்டியில் உள்ள பந்தா ஊருணியில் மரக்கன்றுகள் நடும் விழா தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் நேதாஜி தலைமை யில் நடந்தது. தீபாவளி நாளான நேற்றும் இன்றும் பட்டாசு களை தவிர்த்து அதற்குப் பதிலாக வேம்பு, புங்கன். மகிழம், இலுப்பை உள்ளிட்ட மரங்களை பசுக்காரன்பட்டி ஊருணியில் கிராம வளர்ச்சிக்குழு இளைஞர்கள் சுமார் 200 மரக்கன்றுகள் நடும்பணியில் ஈடுபட்டது. இந்தப் பகுதி இளைஞர்கள் மத்தியில் பேசு பொருளாகி உள்ளது.