• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சிறுதானிய உணவு மதிப்பு கூட்டுதல் பயிற்சி முகாம்

ByKalamegam Viswanathan

Jan 29, 2025

மதுரை தனியார் கல்லூரி மூலம் பழங்குடி மற்றும் பட்டியல் மக்களுக்கான திறன் வளர்ப்பு மற்றும் சிறுதானிய உணவு மதிப்பு கூட்டுதல் பயிற்சி முகாம் நடைபெற்றது.

பட்டியல் மற்றும் பழங்குடி மகளிர் 3 பிரிவுகளில் 74 பேருக்கு சிறுதானிய மதிப்பு கூட்டுதல் பயிற்சி வேலை வாய்ப்பு-பேராசிரியர் வின்சன்ட் தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப இயக்குனர்.

அறிவியல் சமநிலை அதிகாரமளித்தல் மற்றும் மகளிர் முன்னேற்றப்பிரிவு , இந்திய அரசு அறிவியல் தொழில்நுட்பத் துறை, தமிழ்நாடு அரசு அறிவியல் தொழில் நுட்ப மாநில மன்றம் மற்றும் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி இணைந்து நடத்தும் பட்டியல் இனம் (ம) பழங்குடி இன மக்களுக்கான அமைப்பு என்ற திட்டத்தின் கீழ் சிறுதானிய மதிப்புக் கூட்டுதல் மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது,

  கல்லூரி முதல்வர் முனைவர் அ.ராமசுப்பையா தலைமை தாங்கினார்,கல்லூரி தலைவர் ராஜகோபால், செயலர் விஜயராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

   மதுரை மாவட்டத்திலுள்ள எஸ் .சி/ எஸ்.டி பிரிவை சார்ந்த மக்களின் வாழ்வாதாரங்களையும் , அவர்களின் தேவைகளையும் கண்டறிந்து இன்றைய நடப்பியலோடு ஆராய்ந்து இன்றைய சூழலுக்கு ஏற்ப பலவகையான திறன் வளர்ப்பு மற்றும் தொழில் முனைவோராக உருவாக வழிவகை செய்யும் வகையில், 

குறிப்பாக மதுரையில் சிறுதானியம் விளைச்சல் அதன் முக்கியத்துவம் அறிந்து மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி இங்குபேசன் சென்டர் ( Incubation center ) மூலம் பயிற்சி வகுப்பு மற்றும் தொடக்க விழா நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற உறுப்பினர் செயலர் பேரா.முனைவர் ச.வின்சென்ட் அவர்கள் பட்டியல் இன மற்றும் பழங்குடி இன மக்களுக்கான தாங்கள் இயற்கை மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானியத்தை கொண்டு நிறைவான உணவு பண்டங்களை தயாரிப்பதோடு தாங்களே தொழில் முனைவோராக உருவாக முடியும்.

இதற்காக தான் பல நல திட்டங்களையும், வங்கி கடன் ஆகியவற்றை தமிழக அரசு செய்து வருகிறது, இத்திட்டம் மூலம் பெண் தொழில் முனைவோர் ஊக்கபடுத்தப்பவும், மன்னர் கல்லூரி மூலம் தேவையான பயிற்சியும் , ஆலோசனைகளையும் வழங்க தமிழக அரசு மூலம் ஏற்பாடு செய்துள்ளோம்.

இதில் பயிற்சி பெறும் பயிற்சியாளர் கடமைக்கு கலந்து கொள்ளாமல் வாழ்வில் தொழில் முனைவோராக வலம் வேண்டும் என சிறப்புரையாற்றினார்.

மதுரை சாத்தியக் நியூட்ரி பெஸ்ட் பிரைவேட் லிமிடெட் திருமதி சுபாஷினி தர்மேந்திரா மற்றும் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி உணவு ( ம) ஊட்டச்சத்து துறைத் தலைவர் முனைவர் கோபி மணிவண்ணன் ஆகியோர் தலைமையிலான குழு பயிற்சி அளித்தனர்.

முன்னதாக மாணவர் நலன் நெறியாளர், பொருளாதாரத்துறை பேராசிரியர் மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர் முனைவர் அழகேசன் வரவேற்புரையாற்றினார், உணவு (ம) ஊட்டச்சத்து அறிவியல் துறைத் தலைவர் முனைவர் கோபி மணிவண்ணன் நன்றி கூறினார், 
   இதில் பட்டியலில் இன மற்றும் பழங்குடி இன மக்கள் 3 பிரிவுகளில் 74 பேர் கலந்து கொண்டனர்.

   விழாவிற்கான ஏற்பாடுகளை மன்னர் கல்லூரி முதல்வர் சுப்பையன் ஏற்பாடு செய்தார்.