• Mon. May 20th, 2024

சிவகங்கையில் தொடர்ந்து குட்கா புகையிலை பொருட்களை விற்ற 54 கடைகளை தற்காலிகமாக மூடும் நடவடிக்கைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்..,

ByG.Suresh

Nov 29, 2023

தமிழகத்தில் குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை விற் கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவிட்டார்.

இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை விற் கும் கடைகள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் கல்வி நிறுவனங்கள் அருகே தொடர்ந்து குட்கா விற்ற 54 கடைகள் மீது நடவடிக்கை எடுக்க உணவுப் பாதுகாப்புத் துறைக்கு போலீஸார் பரிந்துரை செய்தனர்.

அதன்படி குட்கா விற்ற கடை களுக்கான உரிமத்தை ரத்து செய்து, அக்கடைகளை தற்காலி கமாக மூடும் நடவடிக்கைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வரு கின்றனர்.

சிவகங்கை நகரில் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் பிரபாவதி தலைமையில்உணவுப் பாதுகாப்பு அலுவலர் சரவணக்குமார், எஸ்ஐ சண்முகப் பிரியா ஆகியோர் குட்கா விற்ற ஒரு கடையை தற்காலிகமாக மூடினர். இதேபோல் மற்ற கடைகளையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *