• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் சார்பில் அன்னதானம்..,

ByKalamegam Viswanathan

May 8, 2025

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார்.

மீனாட்சி திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் சார்பில் 4000 பேருக்கு இன்று அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை தமிழக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார்.

மதுரையில் கடந்த நான்கு ஆண்டுகளாக, ஆதரவற்றோர் முதியோர் மற்றும் வறியோரின் வயிற்று பசியை ஆற்றும் அரும் பணியை செய்து வருகிறது. மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நாட்டில் கொரோனா பாதிப்பு வீரியமாகி மக்கள் பாதிக்கப்பட்ட 2020ஆம் ஆண்டில் இருந்து, இந்த சேவையை செய்து வருகிறது.

கடந்த பல ஆண்டுகளாகவே, பார்வைத்திறன் குறைபாடு உள்ள 250 மாற்றுத்திறனாளிக் குடும்பங்களுக்கும் மாதம்தோறும் அரிசியும், ஆண்டுக்கு ஒரு முறை புத்தாடைகளும் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை பேருந்து நிலையம், ரயில் நிலையம், அரசு மருத்துவமனையின் விபத்து அவசர சிகிச்சை பிரிவு மற்றும் சாலை ஓரத்தில் உள்ள பசியால் வாடுவோருக்கு உணவினை வழங்கி வருகிறார். மதுரையைச் சேர்ந்த சமூக சேவகர் நெல்லை பாலு.

இதற்காகவே ‘மதுரையின் அட்சயப் பாத்திரம்’ என்ற டிரஸ்ட் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் இந்த சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். தினமும் உணவு தருவதோடு மட்டுமின்றி அமாவாசை பௌர்ணமி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களிலும் இன்னும் அதிகமான மக்களுக்கு உணவினை கொடுத்து வருகிறார்.

மதுரையில் இன்று மீனாட்சி திருக்கல்யாண வைபவம் மீனாட்சி அம்மன் கோவிலில் விமரிசையாக நடைபெற்றது. திருக்கல்யாண வைபவத்தை கண்டு ரசித்த பக்தர்களின் பசியாற்ற மதுரையில் பல்வேறு இடங்களில் 4000 க்கும் மேற்பட்டோருக்கு இன்று உணவு வழங்கப்பட்டது.
.
மதுரை வடக்கு மாசி வீதியில் அன்னதான வைபவத்தை தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும் தமிழக முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார். நிகழ்வில் ஆடிட்டர் சேது மாதவா, வெற்றிவேல்,முன்னாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.