• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கங்கனாவுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்

Byகாயத்ரி

Dec 1, 2021

ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.

அப்போது விவசாயிகளின் போராட்டத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கங்கனா ரணாவத் கருத்துக்களை வௌியிட்டுவந்தார். இந்த நிலையில் கங்கனா ரணாவத் இன்ஸ்டாகிராமில் கு கூறியிருப்பதாவது: சீர்குலைக்கும் சக்திகள் தொடர்ந்து எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இவற்றுக்கு நான் பயப்பட மாட்டேன். நாட்டுக்கு எதிராக சதி செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பேன். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்துள்ளேன். அவர்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவ்வாறு கங்கனா குறிப்பிட்டுள்ளார்.