மதுரையில் விமான நிலையத்தில் மூடுபனி அவசரகால ஒத்திகை நடைபெற்றது.

அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணிவரை விமான நிலையங்களில் மூடு பனியால் ஏற்படும் பாதிப்பு குறித்து பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.


மதுரை விமான நிலையத்தில் பயணிகள் வசதிகளை பூர்த்தி செய்யும் வகையில் விமான நிறுவனங்கள் சிஐஎஃப் உள்ளிட்ட அனைத்து துறையினர் பங்கேற்ற கூட்டம் விமான நிலைய இயக்குனர் முத்துகுமார் தலைமையில் நடைபெற்றது.
அதிகாலை 4 மணி முதல் காலை 10 மணி வரை மூடுபனியால் விமான இயக்கங்கள் பாதிப்படைவது குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.

திருவனந்தபுரம் தூத்துக்குடி , திருச்சி விமான நிலையங்களில் இருந்து திருப்பி விடப்பட்ட விமானங்கள் மதுரை வருகின்றன. இதனால் மதுரையில் இருந்து சென்னை பெங்களூர் டெல்லி ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் விமான சேவைகளும் பாதிப்பு ஏற்படுகின்றன.
இதுதொடர்பாக மதுரை விமான நிலையத்தில் மூடுபனியால் விமான போக்குவரத்து பாதிப்பு தொடர்பான ஒத்திகை நடந்தது.
அதன்படி திருவனந்தபுரத்திலிருந்து திருப்பி விடப்பட்ட விமானங்கள் இரண்டு குழந்தைகள் உட்பட 48 பயணிகளுடன் வருவதாக தகவல் பெறப்பட்டது. பயணிகளுக்கான தங்குமிடம் உணவு கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குழந்தைகள் காப்பகம் போக்குவரத்தும மற்றும் மருத்துவ வசதிகள் போன்றவற்றை தயார் நிலையில் வைக்கப்பட்டது.

இதுபோன்ற சம்பவங்களில் ஒவ்வொரு துறையினரின் பொறுப்புகள் குறித்து விமான நிலைய அனைத்து துறை அலுவலர்களும் தெளிவுபடுத்தப்பட்டது.




