தேமுதிக நிறுவன தலைவர் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் முன்னிட்டு பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் வழிகாட்டுதல் படி கோவை பீளமேடு பகுதி கழகம் சார்பாக பகுதி செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் மாவட்ட கழக செயலாளர் சிங்கைkசந்துரு,மாவட்ட துணை செயலாளர் கோவித்தராஜ் முன்னிலையில் பீளமேடு பகுதியில் கேப்டன் விஜயகாந்த் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது,

அதனை தொடர்ந்து நகரின் பல்வேறு இடங்களில் கேப்டன் அவர்களின் புகைப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
மேலும் இந்த நிகழ்வில் சிட்டிkராமசந்திரன் வட்ட கழக செயலாளர், வடிவேலு, ராஜேஷ் ,அழுகுராணி,கற்பகவல்லி மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.




