குமரி தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் 57-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாகர்கோவிலில் அவரது திருஉருவ சிலைக்கு குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் தளவாய்சுந்தரம், எம்.எல்.ஏ., தலைமையில் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

குமரி தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் 57-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாகர்கோவிலில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் தலைமையில் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம், தாய் தமிழகத்தோடு இணைய பாடுபட்ட
மாபெரும் போராட்டத்தின் தலைவர் மார்ஷல் நேசமணி அவர்கள். அவர்களின் 57-வது ஆண்டு நினைவு தினம் இன்று (01-06-2025) கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள மார்ஷல் நேசமணி அவர்களின் திருஉருவ சிலைக்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் தலைமையில் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், மாநில மகளிரணி துணைச் செயலாளரும், குமரி கிழக்கு மாவட்ட பூத்கமிட்டி பொறுப்பாளருமான ராஜலெட்சுமி, முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான பச்சைமால், கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் சந்துரு, கழக மகளிரணி துணைச் செயலாளர் ராணி, மாவட்ட கழக இணைச் செயலாளர் சாந்தினி பகவதியப்பன், தோவாளை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளரும், ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவருமான முத்துக்குமார், தோவாளை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர்.சுந்தர்.நாகர்கோவில் மாநகர கிழக்கு பகுதி கழகச் செயலாளர் ஜெயகோபால், தெற்கு பகுதி கழகச் செயலாளர் முருகேஷ்வரன், வடக்கு பகுதி கழகச் செயலாளரும், மாநகராட்சி உறுப்பினருமான ஸ்ரீலிஜா, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளரும், மாநகராட்சி உறுப்பினருமான அக்சயா கண்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ரபீக், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராஜாராம், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் ஜெயசீலன், மாவட்ட விவசாய அணி தலைவர் பத்தல்விளை விஜயன், மாநகர வட்ட கழகச் செயலாளர்கள் வேலாயுதம், ஜெயராஜ், ராஜாராம், சுசீந்திரம் கலா உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.