• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு-பக்தர்கள் செல்ல தடை..!

Byகாயத்ரி

Nov 20, 2021

கனமழை மற்றும் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இன்று சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மகரவிளக்கு, மண்டல பூஜைகள் நடைபெறும். இந்த பூஜையில் கலந்துகொண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய கேரளா, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து விரதம் கடைபிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அந்த வகையில் கார்த்திகை மாதம் தொடங்கியதையடுத்து சபரிமலை அய்யப்பன் கோவிலில் மீண்டும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதற்கிடையில், பத்தனம் திட்டா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பம்பை ஆற்றுப்பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில்கொண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் திவ்யா தெரிவித்துள்ளார். மழை குறைந்து பம்பை ஆற்றில் வெள்ளம் குறைந்தவுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்றும் அவர் கூறியுள்ளார்.