• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

புளோ சார்பில் புளோ பஜார் 2நாள் கண்காட்சி..,

BySeenu

Jun 20, 2025

இந்திய தொழில் வர்த்தக சபை அமைப்பின் பிரிவின் மகளிர் அமைப்பான பிக்கி புளோவின் தலைவர் அபர்ணா சுங்குவின் தலைமையின் கீழ் இயங்கி வரும் கோவை பிக்கி புளோ மகளிர் தொழில் முனைவோர் கொண்டாட்டத்தின் 10வது பதிப்பாக தனித்துவமிக்க வாழ்வியல் முறை இரண்டு நாள் கண்காட்சி மற்றும் விற்பனையான ப்ளோ பஜார் 2025-ன் துவக்க விழா இன்று நடைபெற்றது. கோவை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த மகளிர் தொழில் முனைவோர் இதில் பங்கேற்றுள்ளனர்.

இந்த கண்காட்சி கோவை அவிநாசி ரோட்டில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் இன்றும் நாளையும் (ஜூன் 20 மற்றும் 21) நடக்கிறது. இங்கு துணி முதல் வெள்ளி நகை வரை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான ஆடைகள், வீட்டு அலங்கார பொருட்கள், பட்டுப்புடவைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பிக்கி புளோ கோவை, இந்த ஆண்டு மகளிர் சுய உதவி குழுவினருக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும், கிராமப்புற தொழில் முனைவோருக்கும் பொருளாதார வளர்ச்சிக்காக 40 அரங்குகளை இலவசமாக அளித்துள்ளது. இது, தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தி, அடிமட்டத்திலிருந்து உயர வலிமையான தளமாக உதவும்.

இந்த கண்காட்சியை கோவை மாவட்ட ஆட்சி தலைவர் பவன்குமார் கிரியப்பவனர் அவர்கள் இன்று ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். பிக்கி புளோ கோவை கிளையின் முன்னாள் தலைவர் சுகுணா லட்சுமி நாராயணசாமி குத்துவிளக்கு ஏற்றினார்.பிக்கி புளோ, இந்திய தொழில், வணிக கூட்டமைப்பின் மகளிர் பிரிவாகும். இந்தியாவில் 19 கிளைகளைக் கொண்டு இயங்கி வருகிறது. மகளிரை தொழில் முனைவோராக்கவும், அவர்களது திறனை மேம்பாடுத்தவும் செயல்பட்டு பொருளாதாரத்தில் உயர வழிகாட்டி வருகிறது. டிஜிட்டல் கல்வி பயிற்சி பட்டறை, தொழில் பயிற்சி, நிலையான வாழ்வில் பிரச்சாரங்களையும் புறநகர் பகுதியில் மேற்கொண்டு வருகிறது.

செங்கோட்டையூர் கிராமத்தை தத்தெடுத்து, அங்கு ஒரு ஆழ்துளை கிணறு அமைத்து, பாசன வசதியை ஏற்படுத்தி மகளிர் விவசாய தொழில் முனைவோரை உருவாக்கியுள்ளது. இந்த புளோ பஜார் 2025 கண்காட்சிக்கு, மகளிர் மேம்பாட்டுக்கு அனைத்து வகையிலும் உதவி கொண்டாடி வரும் ஐயானா டயமன்ட்ஸ் பொறுப்பேற்று நடத்துகிறது. இது வெறும் ஷாப்பிங் கண்காட்சியாக மட்டுமின்றி, மகளிர் முன்னேற்றத்துக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் சமுதாயத்தின் வளர்ச்சியாக இருக்கும்.