போதிய பயணிகள் இல்லாததால், சென்னையில் இருந்து புறப்படும் 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நாள்தோறும் சென்னையில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏராளமான விமானங்கள் சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்று புறப்பட வேண்டிய 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து நிர்வாகம் தெரிவித்ததாவது..,
மும்பை, பெங்களுரு, மதுரை, அந்தமான் உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்கள் மற்றும் சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்குச் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. போதிய பயணிகள் இல்லாததால், இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விமானங்களுக்கு முன்பதிவு செய்துள்ள பயணிகளின் டிக்கெட்டுகள் வேறு விமானங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.