இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டு நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி அரியலூர் மாவட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு கொடியேற்று விழா நடைபெற்றது. கட்சி கொடியை அரியலூர் நகர கிளை பொறுப்பாளர் ந. கோவிந்தசாமி ஏற்றி வைத்தார்.

ஏஐடியுசி தொழிற்சங்க கொடியை சிபிஐ ஒன்றிய செயலாளர் து. பாண்டியன் ஏற்றி வைத்தார்.தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. கொடியேற்று விழா நிகழ்ச்சியில் கட்சி மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் த.தண்டபாணி, அரியலூர் நகராட்சி ஏஐடியூசி ரெ.நல்லுசாமி, அ.பொன்னம்மாள், கயர்லாபாத் கிளை து. ராஜா அரியலூர் முருகேசன், பழனிசாமி உட்பட கலந்து கொண்டனர்.




