பாத அழுத்த சிகிச்சை நிபுணர்கள் முதல் மாநில மாநாடு கன்னியாகுமரியில்
2_நாட்கள் நடந்தது.
கன்னியாகுமரி ஒய்எம்சி அரங்கில் பாத அழுத்த சிகிச்சை நிபுணர்களின் முதல் மாநில மாநாடு 2_நாட்கள் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து 100_க்கும்மேற்பட்ட பாத அழுத்த சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டிற்கு இந்திய இயற்கை மருத்துவ சங்க துணை தலைவர் டாக்டர் அதியன் தலைமை தாங்கினார். அருட்சகோதிரி அர்ச்சனா தாஸ் முன்னிலை வகித்தார். பாத அழுத்த சிகிச்சை நிபுணர்கள் கூட்டமைப்பு நிர்வாக இயக்குநர் டாக்டர் அரசு வரவேற்று பேசினார்.
மாநாட்டில் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் டேனியல் தேவசுதன், ஓய்வு பெற்ற சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் ராபர்ட் சிங், தேசிய யோகா மைய இயக்குநர் டாக்டர் சேது சுப்பிரமணியன், டாக்டர் சேம்சங், கும்பகோணம் இயற்கை மருத்துவ கல்லூரி நிர்வாகி டாக்டர் ஜான், இயற்கை மருத்துவர் உமாமகேஸ்வரி, திருப்பு முனை மது அடிமைகள் மறுவாழ்வு மைய இயக்குநர் நெல்சன், பங்கு தந்தை அருட்பணி பிரான்சிஸ் சேவியர், சமூக ஆர்வலர் ஜெயசிறில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரியில் நடைபெற்ற இரண்டு நாட்கள் மாநாட்டில் பாத அழுத்த சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்றனர்.
பாத அழுத்த சிகிச்சை, மூலம், கை, கால் மற்றும் முதுகுவலி போன்ற நோய்களுக்கு நிரந்தர தீர்வு கணப்படும் என்றும், குழந்தையின்மை, ரத்தம் சம்பந்தமான நோய், சர்க்கரை நோய், தலைசுற்றல், உடல் தொடர்புடைய அனைத்து நோய்களுக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று மாநாட்டில் பேசிய மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.