• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஸ்விக்கியில் முதல் இடம் பிடித்த சிக்கன் பிரியாணி..!

Byகாயத்ரி

Dec 23, 2021

ஒவ்வொரு ஆண்டும் ஸ்விக்கி நிறுவனம், ஆர்டர்களின் அடிப்படையில் இந்தியாவில் அதிக நபரால் விரும்பி சாப்பிடும் உணவை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 500 நகரங்களில் பெறப்பட்ட ஆர்டர்களின் அடிப்படையில் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஆறு வருடமாக மக்கள் விரும்பி சாப்பிடும் உணவில் முதலிடத்தை பிடித்த சிக்கன் பிரியாணி இந்த ஆண்டும் அதை தக்க வைத்துள்ளது. இந்தியாவில் நடப்பு ஆண்டில் 6 கோடியே 4 லட்சத்து 44 ஆயிரம் பேர் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார்கள்.


இந்தியாவில் அசைவப் பிரியர்கள் மற்ற உணவுகளைக் காட்டிலும் சிக்கன் பிரியாணி மீது அதீத மோகம் கொண்டுள்ளார்கள். இதனால் தெருக்கு ஒரு சிக்கன் பிரியாணி கடை உருவாகியுள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் சிக்கன் பிரியாணி முதலிடத்தை தக்க வைத்துள்ளது.


இந்தியாவில் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 115 பேர் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்கிறார்கள். சென்ற ஆண்டு ஒரு நிமிடத்திற்கு 90 பேர் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்த நிலையில் தற்போது எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.


சென்னை, கொல்கத்தா, லக்னோ, ஹைதராபாத் ஆகிய இடங்களில் அதிக நபர்கள் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார்கள். சிக்கன் பிரியாணிக்கு அடுத்தபடியாக சமோசா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

அதன்பிறகு அதிகப் பேர் ஆர்டர் செய்யும் பட்டியலில் பாவ் பாஜி மூன்றாவது இடத்தையும் குலாப் ஜாமுன் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது. இதையெல்லாம் பார்க்கும்பொழுது எல்லாருடைய மனதிலும் எழுவது இந்த பொறப்பு தான் நல்லா ருசிச்சு சாப்பிடக் கிடச்சுது.