2025ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வில் சிவகங்கை மாவட்டம் 98.31% தேர்ச்சி விகிதத்துடன் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளது. மேலும், அரசு பள்ளிகளில் 97.49% தேர்ச்சி விகிதம் பெற்று மாநில அளவில் முதன்மை இடத்தை கைப்பற்றியுள்ளது.

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு. பாலமுத்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, இந்த சாதனையைப் பெற முதலமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு நன்றியுள்ளேன். மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டலும், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் விடாமுயற்சியும், திட்டமிட்ட வகுப்புகள் மற்றும் அதிகப்படியான மாதிரி தேர்வுகள் மூலம் மாணவர்கள் நன்கு தயாராகினர். கல்வித்துறை உயர் அதிகாரிகள் நேரில் வந்து ஊக்கமளித்ததும், ஆசிரியர்கள் தங்கள் பாடங்களில் மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க எடுத்த நடவடிக்கைகளும் இந்த வெற்றிக்கு காரணம்” என்றார்.
மாவட்டம் முழுவதும் 278 பள்ளிகளில் இருந்து 17,679 மாணவர்கள் (மாணவர்கள் – 8,870, மாணவிகள் – 8,809) தேர்வு எழுதினர். இதில் 17,380 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் (மாணவர்கள் – 8,662, மாணவிகள் – 8,718).
175 பள்ளிகள், அதில் 79 அரசு பள்ளிகள், 100% தேர்ச்சி விகிதம் பெற்றன. 2017–18ஆம் ஆண்டிலும் 98.05% தேர்ச்சி விகிதத்துடன் மாநிலத்தில் முதலிடம் பெற்றதை கல்வி அலுவலர் நினைவுகூர்ந்தார்.