மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரை 31 கிலோமீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற உள்ள நிலையில், அதற்கான முதல் கட்ட பணி இன்று மெட்ரோ ரயில் திட்ட நில அளவையர்கள் மூலம் துவங்கின.

திருமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை சாலையில் 800 மீட்டர் தொலைவிற்கு சாலையில் இருந்து 30 மீட்டர் தூரத்திற்கான கட்டிடங்களை அகற்றுவதற்கான கணக்கெடுப்பு பணி இன்று நடைபெற்றது. இதில் வங்கி,காவல் நிலையம், தனியார் உணவகங்கள் உள்ளிட்டவற்றுக்கான வாயிற்பகுதிகள் வரை அகற்றுவதற்கான கணக்கெடுப்பு பணி நடைபெற்றது .
திருமங்கலம் ராஜாஜி சிலையிலிருந்து மதுரை தோப்பூர் வரை மெட்ரோ ரயில் மேம்பாலம் சாலையில் அமைக்கப்பட உள்ளதால் கட்டிடங்கள் அகற்றப்பட மாட்டாது என நில அளவையர்கள் தெரிவித்தனர்.
