• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பட்டாசு வணிகர்கள் ஆலோசனை கூட்டம்..,

ByKalamegam Viswanathan

May 22, 2025

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மண்டலம் சார்பில் பட்டாசு வணிகர்கள் ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் பரமேஸ்வரன் தலைமையில் செயலாளர் ஜெபசிங், பொருளாளர் ஆரோக்கியராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர்களாக தென்காசி மாவட்ட தலைவர் பால்ராஜ், மண்டல ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பட்டாசு வணிகர்கள் நலன் குறித்து பேசினர்.

கூட்டத்தில் அரசின் தற்காலிக உரிமம் வழங்குவதை 60 நாட்களுக்கு முன்பே வழங்க வேண்டும்.

புதிய உரிமம், நிரந்தர உரிமம் புதுப்பிப்பு பணிகள் 3 மாவட்டங்களிலும் மந்த நிலையில் உள்ளது. அரசு அதிகாரிகள் விரைந்து விசாரித்து நிரந்தர உரிமம் வெடிபொருள் சட்டம் 2008 விதியின் 106 மற்றும் 112ன் படி 5 ஆண்டு காலம் வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல்லை மாநகர பகுதிக்குள் அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டு உள்ள இடங்களுக்கு நிரந்தர உரிமம் வழங்க வேண்டும்.

பட்டாசு வணிகர்கள் அரசின் வெடி பொருள் சட்டங்களுக்கு உட்பட்டு வணிகத்தை மேற்கொள்ள வேண்டும்.

எந்த ஒரு தொழில் வணிகத்திலும் இல்லாத பழக்கமான இலவசமாக பட்டாசுகள் வழங்கும் நடைமுறையை ஒழிக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் மண்டல கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நிர்வாக முழு உறுப்பினர்கள் சந்திரசேகரன், சரவணன், நெல்லை மாநகர தலைவர் சேதுராமலிங்கம், தென்காசி மாவட்ட செயலாளர் குழந்தைவேலு உட்பட பட்டாசு வணிகர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பூஜா பட்டாசு மதன்மோகன் நன்றி கூறினார்.