மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே நரியம்பட்டி கிராமத்தில் ஜெயபாண்டி என்பவருக்கு சொந்தமான 50 அடி ஆழமுள்ள கிணற்றில் மூன்று மயில்கள் விழுந்துள்ளதாக சோழவந்தான் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமரன் மற்றும் நாகராஜ் தலைமையிலான குழுவினர் கிணற்றுக்குள் விழுந்த மூன்று மயில்களை உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட மூன்று மயில்களை வனத்துறை அலுவலர் ஜெயலட்சுமியிடம் ஒப்படைத்தனர்.













; ?>)
; ?>)
; ?>)