மதுரை வெள்ளக்கல் அருகே விவசாய நிலத்தில் வெயில் தாக்கம் காரணமாக காய்ந்த புல்லில் தீ பற்றி எரிய தொடங்கியது. அருகில் உள்ள வயல் நிலங்களில் தீப்பரவ தொடங்கி அதிக அளவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து வந்த மதுரை அனுப்பானடி நிலைய தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்க 1 மணி நேரமாக போராடி வருகின்றனர். வெயில் தாக்கம் காரணமாக தீப்பிடித்ததாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மதுரை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் செல்வ விநாயகம் தலைமையில் அலுவலர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.